தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக ஆளுநர் ரவிக்கும் இடையே நிலவி வந்த பணிப்போர் தமிழக சட்டசபையின் முதல் நாள் கூட்ட தொடரில் வெளிப்படையாக தெரிய தொடங்கியது. ஆளுநர் உரையில் மாற்றங்கள் செய்து தமிழக ஆளுநர் படித்ததாக திமுகவினர் குற்றம் சுமத்த அதனை நீக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார்.
ஆளுநர் அருகில் இருந்த தமிழ் தெரிந்த காவலரை அழைத்து விவரங்களை தெரிந்து கொண்டு அவையில் இருந்து வெளியேறினார், ஆளுநரை பொறுத்த வரை அவரது பாதுகாப்பிற்கு மாநில காவல் துறையில் இருந்து ஒருவரும், இராணுவத்தில் இருந்து ஒருவரும் எப்போதும் இருப்பது வழக்கம்.
இந்த சூழலில்தான் ஆளுநர் மீது புகார் தெரிவித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி போன்றோர் குடியரசு தலைவரை சந்தித்தனர், குடியரசு தலைவரிடம் தமிழக ஆளுநர் தமிழ்நாட்டின் நிலை அறிந்து செயல்படும்மாறு அறிவுரை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த கட்டமாக ஒரு செய்தி வெளியானது தமிழக ஆளுநர் இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்வதாக ஆளுநர் மாளிகை வட்டாரம் தரப்பில் கூறப்பட்டது, இதையடுத்து என்னதான் அடுத்து அரங்கேர போகிறது என TNNEWS24 தரப்பு ஆளுநருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தது.
அன்றைய தினம் சட்டசபையில் அரங்கேரிய முழு நிகழ்வு குறித்து ஆளுநர் தனது செயலாளர்கள் உள்ளிட்டோரிடம் அறிந்து கொண்டார், அது தவிர்த்து மறு நாள் ஆங்கில செய்தி தாள்களை முழுமையாக படித்தார் ஆளுநர், அவை மட்டுமின்றி தமிழக செய்தி தாள்களை படிக்க கூறி மொழி மாற்றம் செய்து ஆளுநர் தெரிந்து கொண்டார்.
அதில் முக்கியமான மூன்று விஷயங்கள் ஆளுநருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது, ஆளுநர் உரையில் மாற்றங்கள் தேவை என ஆளுநர் கூறிய பின்பும் அதனை தமிழக அரசு மாற்றம் செய்யாமல் இருந்தது, மற்றொன்று தமிழகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது குறித்து, மத்திய உளவு amaippuஅமைப்பு விசாரணை செய்து வருகிறது, தீவிரவாத நடவடிக்கைகள் இருப்பது தெளிவாக தெரிந்தும் தமிழகம் அமைதி பூங்காவ திகழ்வதை எப்படி ஏற்றுகொள்ள முடியும் என ஆளுநர் கோவமடைய, இது குறித்து முழுமையான விளக்கத்தை ஆளுநர் தரப்பில் உள்துறை அமைச்சகம் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு கொசுக்கப்பட்டு விட்டது.
இது ஒருபுறம் என்றால் சபையில் அமைச்சர் பொன்முடி ஆளுநர் சபையில் இருந்து வெளியேறும் போதும் போயா என ஆவேசமாக கையசைத்தது, ஆளுநரை கடுமையாக பாதித்து இருக்கிறதாம் எதிரி ஆனாலும் முதுகிற்கு பின்னால் பேசுவது கோழைதனம் என்ற போது அரசியல் அதிகாரம் மிக்க பொறுப்பில் இருக்கும் ஆளுநரை பொன்முடி சந்தையில் கசாப்பு வாங்க மல்லுக்கு நிற்பது போல் கையசத்தது பெரும் மன உழைச்சலுக்கு ஆளுநரை மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த சூழலில் தான் இன்று டெல்லி செல்கின்ற ஆளுநர், தமிழக அமைச்சர்கள் குறித்து எதிர் கட்சிகளான பாஜக மற்றும் அதிமுக தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவையான ஆதாரங்களை உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும் ஜனவரி மாத இறுதியில் ஒவ்வொரு அமைச்சர்கள் குறித்த ஊழல் பட்டியல் வெளியிட படும் என பாஜக வட்டாரத்திலும் பேசப்படுகிறது, இந்த சூழலில் தான் அதில் உயர் கல்வி துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி பெயர் முதல் இடத்தில் இருப்பதாகவும் அவரது மகன் உள்ளிட்ட பலர் குறித்த இதுவரை வெளியாகத தரவுகளுடன் ஊழல் பட்டியல் வெளியாகும் எனவும் அன்றைய தினம் நினைத்து பார்க்க முடியாத அடி ஆளுநர் புறமுதுகிற்கு பின்னால் கையசைத்த பொன்முடிக்கு மட்டும் இன்றி இன்னும் பலருக்கும் இருக்கும் என்று அடித்து கூறுகின்றன டெல்லி வட்டாரங்கள்.