24 special

பல்டி அடித்து.. பேட்டியின் போது உளறிய அமைச்சர் பொன்முடி.. அடி பலமோ!!

Rn ravi,  ponmodi
Rn ravi, ponmodi

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து இருந்தார் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தன்னை கலந்து ஆலோசனை செய்யாமல் விழா நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் L. முருகனை அழைத்து இருப்பதாக குற்றசாட்டு சுமத்தி இருந்தார் பொன்முடி மேலும் ஆளுநர் அரசியல் நிகழ்வாக பட்டமளிப்பு விழாவை பயன் படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இந்த நிலையில் மத்திய அமைச்சர் L.முருகன் கலந்து கொண்டால் விழாவை புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம், பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர் என்பதால் பொன்முடி புறக்கணிப்பு செய்கிறாரா? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்தன, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் பொன்முடி அப்போது நிகழ்ச்சியை எவ்வாறு நடத்த வேண்டும், விருந்தினர்களை அழைப்பது எப்படி என்ற பல்வேறு நடைமுறைகள் இருக்கிறது, எனது பெயர் முருகன் பெயருக்கு கீழே இருப்பது சரியல்ல என்ற பொருள் விளக்கும் படி பேசினார் பொன்முடி.

இதற்கு இடையில் அவரையே அறியாமல் சில வார்த்தைகளை பேசிவிட்டார், முந்தைய காலத்தில் துணை வேந்தர்கள் நிகழ்ச்சிக்கு அழைப்பார்கள் என்ன ஏது என கேட்காமல் வேந்தர் (ஆளுநர் ) பங்கேற்பார் ஆனால் இப்போது அதெல்லாம் இல்லை என தன்னையும் அறியாமல் உண்மையை பேசிவிட்டார் பொன்முடி.

அதாவது பத்திரிக்கையில் தனக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று குற்றசாட்டு சுமத்திய பொன்முடி, அவர் வாயால் ஆளுநர் தலையீடு இருக்கிறது என கூறிவிட்டார் என பாஜகவினர் குற்றம் சுமத்த தொடங்கியுள்ளனர். பல்கலைக்கழங்களின் வேந்தர் என்ற முறையில் ஆளுநர்களுக்கு முழு உரிமை இருக்கிறது அவர்தான் அனைத்தையும் ஆராய கூடிய நபர் அவர் ஆய்வு செய்தால் ஏன் பொன்முடிக்கு கசக்கிறது எனவும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

துணை வேந்தர் நியமனம் தொடங்கி பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் மாநில அரசின் முடிவை ஏற்று கொள்ளவில்லை மாறாக நேர்மையான நபர்களை ஆராய அவரே குழு அமைத்து இருப்பதால் பொன்முடி உள்ளிட்டோருக்கு ஆளுநர் மீது கோவம் அதன் வெளிப்பாடுதான் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக கூறுவது என பலரும் அமைச்சர் பொன்முடி மீதே விமர்சனத்தை வைக்க துவங்கியுள்ளனர்.அமைச்சர் பொன்முடி கொடுத்து பேட்டி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.