Cinema

"மீண்டும்" கவிஞர் வைரமுத்துவை பாஜகவினர் கிழி கிழியென கிழிக்க காரணம் என்ன?

Vairamuthu
Vairamuthu

பா.சிதம்பரத்தை கவிஞர் வைரமுத்து பாராட்டி பேசிய நிலையில் அவர் தான் தற்போது இந்தியா இலங்கை போன்று ஆகாமல் இருக்க காரணம் என பேசியது தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் வைரமுத்துவை விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.


காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கிய பொன்விழா மற்றும் பிறந்தநாள் விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் கவிஞர்  வைரமுத்து இறுதியாக பேசினார். அப்போது, மொழியை அறிந்தவன், மொழியை சமைக்கின்றவன், மொழியோடு வாழ்ந்தன் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை என தெரிவித்த அவர், மேடையில் இருக்கும் விருந்தினர்களாலே இந்த விழா சிறப்பானது என தெரிவித்தார்.

இந்தியாவின் பொருளாதாரம் கொரொனாவிற்கு பின்பும் சரியாமல் இருப்பதற்கும்,  இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவிற்கு வராமல் இருக்கவும் காரணம் ப.சிதம்பரம் என தெரிவித்தார். சிதம்பரத்தின் பேனாவும், நாக்கும் என்ன சொல்கின்றது என்பதை கேட்க இந்திய நாடு காத்திருக்கின்றது என குறிப்பிட்ட அவர், உரையாடல் நீதி என்றால் என்ன என்பதை சிதம்பரத்திடம் கற்று கொண்டேன் எனவும் தெரிவித்தார்.

பா. சிதம்பரம் நிதி அமைச்சராக இருக்கும் போது அடமானம் வைத்த பெட்ரோல் பாண்ட்டிற்கு இன்றுவரை வட்டி கட்டும் சூழல் உருவாகி இருக்கிறது, இந்திய பொருளாதாரத்தை சுக்கு நூறாக ஆக்கிய நபர் சிதம்பரம், செல்போன் மூலம் பணம் அனுப்பும் UPI திட்டத்தை கேலி செய்தார் ஆனால் உலகத்தில் அதிகமாக UPI மூலம் இந்தியாவில்தான் வர்த்தகம் நடைபெறுகிறது.

இப்படிப்பட்ட நபர்தான் இந்திய பொருளாதாரத்தை காப்பாற்றினார் என்றால் அது மிகவும் தவறான தகவல் என வைரமுத்துவை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர் பாஜகவினர். இது ஒருபுறம் என்றால் வைரமுத்து முதலில் தமிழக முதல்வர் ஸ்டாலினைதான் அவரது விழாவிற்கு அழைத்தாராம் ஆனால் என்னவோ அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.