தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறும் மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தொடங்க இன்னும் இரண்டு வாரமே உள்ள நிலையில், நான்கு முனை போட்டியாக அமைந்துள்ள இந்த தேர்தலில் அரசியல் தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்திற்கு பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளாராம். இதனால் பாஜக வேட்பாளர்கள் நாடாளுமன்றம் செல்வது உறுதியாகிவிட்டது.
பாஜகவுடன் கூட்டணியை முறித்த அதிமுக நாடளுமன்ற தேர்தலில் பிரமாண்ட கூட்டணியை அமைத்து வெற்றி பெறலாம் என்று நினைத்தது, ஆனால் யாரும் அதிமுக பக்கம் திரும்பவில்லை ஒரே ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த தேர்தலை எப்படி சந்திக்க போகிறது என்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், டிடிவி, பாரிவேந்தர் மற்றும் இதர கட்சிக்குள் அமைந்துள்ளது. இதனால் பாஜக, திமுக இடையேயான போட்டி என்றும் பாஜக வேட்பாளர்கள் நிச்சயம் பாராளுமன்றம் செல்லலாம் என்று கூறப்படுகிறது. அதில் பாஜகவும் உறுதியாக உள்ளது.
இந்த சூழ்நிலையில், தமிழகத்திற்கு பயணத்தை மேற்கொள்ள உள்ளார் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா. வரும் 5ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். டிடிவி போட்டியிடும் தேனீ தொகுதியிலும், தென் காசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்பாண்டியன் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் என்றும் மதுரை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்தும் பேரணி செல்லவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டமிட்டுள்ளாராம்.
அவரை தொடர்ந்து பிரதமர் மோடியே மீண்டும் தமிழகத்திற்கு வந்து 4 நாட்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். ஏப். 9, 10, 13, 14 ஆகிய தேதிகளில் கோயம்பத்தூரில் போட்டியிடும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக பொது கூட்டத்திலும், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் இணை அமைச்சர் எல் முருகனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளார். தொடர்ந்து, தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தமிழிசை, வினோஜ் பி செல்வம் மற்றும் பால் கனகராஜ் ஆகியோர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். மேலும், வேலூர் தொகுதியில் கூட்டணி சார்பாக போட்டியிடும் ஏசி சண்முகத்திற்கு ஆதரவாகவும் விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இதனால் தமிழக அரசியல் களமே பரபரப்பாக தொடங்கியுள்ளது. இதனால் திமுக, அதிமுக கட்சிக்கு சிக்கலை கொடுத்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக சார்பாக வேட்பாளர்கள் நாடளுமன்றம் செல்ல வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. வரும் நாட்களில் மக்களிடம் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது. இரண்டு திராவிட கட்சிகளுக்கும் இதுவே கடைசி தேர்தல் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.