24 special

திமுகவுக்கு ஷாக் கொடுக்க அண்ணாமலை போட்ட திட்டம்...!

Annamalai, TR Balu
Annamalai, TR Balu

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக பாஜக தலைமை தீவிரமாக திராவிட கட்சிகளுக்கு செக்  வைத்து வருகிறது. மாற்று கட்சியினரை பாஜக தன் வசம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபடும் செயல் தான் இது. இதில் பாஜக ஒரு படி மேலே சென்று திமுக கட்சியின் முக்கிய புள்ளிக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளது.


தேர்தல் தொடங்க 15 நாட்களே உள்ள நிலையில் களத்தில் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மும்முனை போட்டிகளில் அரசியல் தலைவர்கள் மாறி மாறி விமர்சனத்தை மக்களிடம் கூறி வருகிறன்றனர். வழக்கமாக தேர்தல் நேரத்தில் மாற்று கட்சியினர் வேறு கட்சிக்கு செல்வது இயல்பானவை. அதிலும், சினிமா நட்சத்திரங்கள் தொடங்கி சிறிய அமைப்புகளும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இது இயல்பு தான் என்றாலும் பாஜக ஒரு படி மேலே சென்று விட்டது.

மாற்று கட்சியினர் பாஜகவில் இணைந்தால் அவர்களுக்கு பெரிய பொறுப்பு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளது. தேர்தல் நேரம் மட்டுமின்றி மற்ற நேரத்திலும் பாஜக தங்களது கட்சிக்கு மாற்று கட்சியினரை இழுக்கும் பணிகளில் சிறப்பாக செயல்படும். அந்த வகையில், தற்போது திமுகவை விமர்சனம் வைத்து வரும் பாஜக திமுகவில் உள்ள பெரிய தலைக்கு குறி வைத்துள்ளதாக இணையத்தில் ஒரு தகவல் உலா வருகிறது. சமீபத்தில் கூட அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ க்கள் 15 பேர் பாஜகவில் இணைந்து அதிமுகவுக்கே ஷாக்கை கொடுத்தது.

அதேபோல் திமுகவுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக திமுகவில் உள்ள பெரிய தலையான டி.ஆர்.பாலுவின் மகளை பாஜகவுக்குள் கொண்டுவரும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறதாம். டி.ஆர்,பாலுவை பொறுத்தவரை, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நம்பிக்கையானவர்.. இன்னும் சொல்லப்போனால் கருணாநிதியின் அரசியல் நிழல் என்றுகூட சொல்லலாம். பாஜகவிற்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வரும் டி.ஆர்.பாலு, நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக உள்ளார். எனவே டி.ஆர்.பாலு மற்றும் அவரது மகன் டி.ஆர்.பி.ராஜாவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மனோன்மணியை பாஜகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதில் வெற்றி கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே மனோன்மணி விரைவில் பாஜகவில் இணைவார் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.