
உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரிவிகிதங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வரி விகிதத்தை குறைப்பது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே கடந்த 6 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து பால், பாலாடை கட்டி, நெய் ஆகியவற்றை இந்தியாவில் இறக்குமதி செய்ய அந்த நாடு விரும்புகிறது. இது இந்திய விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்பதால் அமெரிக்க பால் பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
அமெரிக்காவில் இருந்து கோதுமை, சோயாபீன், சோளம், ஆப்பிள், திராட்சை, கொட்டை வகைகளை இந்தியாவில் விற்பனை செய்யவும் அந்த நாடு அனுமதி கோரி வருகிறது. அதோடு மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தானியங்களையும் இந்தியாவில் விற்பனை செய்ய அமெரிக்கா விரும்புகிறது. அதற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. மேலும், ‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது. அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யவேண்டும்’ என்றும் ட்ரம்ப் நிர்ப்பந்தம் செய்து வருகிறார். ஆனால்,அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து கச்சாஎண்ணெய்யை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. இந்த சூழலில், இந்திய பொருட்களுக்கான வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரித்து ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்
இதனிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மிக விரைவில் இந்தியாவிற்கு வர இருக்கிறார். சில செய்திகள் புதின் ஆகஸ்டு இறுதியில் இந்தியாவிற்கு வந்து பிறகு மோடியுடன் ஆகஸ்டு 31 ம் தேதி சீனா செல்ல இருப்பதாக கூறுகின்றன. ஆனால் மோடி ஆகஸ்ட் 30 ம் தேதி ஜப்பான் சென்று அங்கிருந்து தான் ஆகஸ்டு 31 ம் தேதி சீனாவிற்கு சென்று தியான்ஜின் நகரில் நடைபெ ற இருக்கும் 25 வது ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.இதனால் இந்த மாத இறுதியில் புதின் இந்தியாவிற்கு வந்து மோடியுடன் இணைந்து சீனா செல்வாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் ரஷ்யாவுக்குச் சென்றிருந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் புதினின் இந்த பயணத்தை உறுதி செய்தார். இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா வரிகளை அறிவித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் இந்த பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மாஸ்கோவில் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி ஷோய்குவுடனான பேச்சுவார்த்தையில், ரஷ்ய அதிபரின் பயணம் குறித்து இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார். மேலும், இந்தியா- ரஷ்யா இடையே இதற்கு முன் நடந்த உச்சி மாநாடுகளை இருதரப்பு உறவுகளில் முக்கியமான தருணங்கள் என்று அஜித் தோவல் குறிப்பிட்டார். இதன் மூலம் ரஷ்ய அதிபரின் பயணத்தின் முக்கியத்தவத்தை அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா பேச்சை மதிக்க்காமல் இந்தியா ரஷ்ய எண்ணெய்யைத் தொடர்ந்து வாங்குவதால், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தக போர் தொடங்கியுள்ளது.. இந்த நேரத்தில் புதின் இந்தியா வருவது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும் உலகில் தற்போது இந்தியா மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. என்பதை இது நிரூபித்துள்ளது. அமெரிக்காவை அறவிடும் நாடக இந்தியா மாறியுள்ளது.