காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு செய்த மனுஷ்ய புத்திரனுக்கு அரசியல் பார்வையாளர் சுந்தர் ராஜ சோழன் பதிலடி கொடுத்துள்ளார்.
மனுஷ்ய புத்திரன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்த கருத்து பின்வருமாறு, தந்தி டிவியில் பேரறிவாளன் குறித்த விவாதத்தில் காங்கிரஸ் பேனரில் உட்கார்ந்திருக்கும் அமெரிக்கை நாராயணன் தமிழகமுதல்வரை வரம்பு மீறி தாக்கிப் பேசுகிறார். பா.ஜ.க ஆதரவாளர்களைவிட மிக மோசமாக பேசுகிறார். அமெரிக்கை நாராயணன் காங்கிரஸ் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளரா? தமிழக காங்கிரஸ் கமிட்டி இவரது பேச்சை ஏற்கிறதா?
கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில் திமுக செய்தித் தொடர்பாளர்கள் எவரும் காங்கிரஸ் தலைவர்களை இத்தகையதொனியில் பேசியதில்லை. இந்த வழக்கு, இந்தத் தீர்ப்பு குறித்த அடிப்படைகளைகூட புரிந்துகொள்ளாமல் அமெரிக்கை நாராயணன் உளறுகிறார்.
அமெரிக்கை நாராயணன் நேரடியாக ஆர்.எஸ்.எஸ்சிலோ பா.ஜ.கவிலோ சேர்ந்துவிடுவ்து நல்லது என குறிப்பிட்டு இருந்தார் மனுஷ்ய புத்திரன் இதற்கு பதிலடி கொடுத்த சுந்தர் ராஜ சோழன் படுகொலையானது நேருவின் பேரன்,இந்தியாவின் முன்னாள் பிரதமர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்
இதற்கு கூட காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு சுரணை வரக்கூடாது,அப்படி வந்தால் அவன் பாஜக - ஆர்எஸ்எஸ்காரனாக வேண்டுமென்றால் இவர்கள் சொல்ல வருவதுதான் என்ன?இங்கே காங்கிரஸ் என்னவாக இருக்கிறது என கேள்வி எழுப்பி இருக்கிறார் சுந்தர் ராஜ சோழன். ஒரு காங்கிரஸ் காரருக்காவது சுரணை வந்ததே என அமெரிக்கை நாராயணன் கருத்தை பலரும் வரவேற்று வருகின்றனர்.