தனியார் ஊடகம் சார்பில் ஏற்பாடு செய்யபட்ட விவாத நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் பாதியில் விவாத நிகழ்ச்சி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த சூழலில் விவாத நிகழ்ச்சியில் இடம்பெற்ற காட்சி ஒன்று இணையத்தில் கடும் வைரலாக பரவி வருகிறது.
தனியார் ஊடகம் ஏற்பாடு செய்த விவாத நிகழ்ச்சியில் திமுக,அதிமுக, பாஜக, இந்து மக்கள் கட்சி, விசிக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது, இதில் திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன், அதிமுக சார்பில் வைகை செல்வன், பாஜக சார்பில் அமர் பிரகாஷ் ரெட்டி, விசிக சார்பில் வன்னியரசு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுகவை சேர்ந்த சபாபதி மோகன் பிரதமர் மோடி குறித்தும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்தும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியதாகவும், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவை சேர்ந்த அமர் பிரகாஷ் ரெட்டி, சபாபதி மோகனை வார்த்தைகளால் வெளுத்து எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
வைரலாகும் வீடியோவில் அமர் பிரகாஷ் ரெட்டி மேடையின் பின்புறம் பார்த்து நீ எங்கள் தலைவரை பேசலாமா உட்காருயா? என பேசும் காட்சியும் அதை தொடர்ந்து கனகசபாபதி மேடையின் முன்னே வந்து கூச்சல் போடும் முறையில் அலறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன, வைரலாகும் மற்றொரு விடியோவில் மேடையில் பாஜக மற்றும் விசிக தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தள்ளும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் பிரபல ஊடகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமியை திமுக தொண்டர்கள் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போது இடையூறு செய்த காட்சிகள் வைரலாகின, தற்போது அதே போன்ற ஒரு சம்பவத்தில் எதிர் தரப்பு வாங்கி கட்டி இருக்கிறது, இதில் திமுகவை சேர்ந்த சபாபதி மோகனை அமர் பிரகாஷ் ரெட்டி யோவ் போயா என பேசியது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிறது.
இந்த சம்பவத்தின் போது வீடியோவில் விசிகவை சேர்ந்த வன்னியரசு அமைதியாக உட்க்கார்ந்து இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது மொத்தத்தில் ஆளும் கட்சியான திமுகவை அனைத்து வகையிலும் சரிக்கு சமமாக எதிர்க்க பாஜக களத்திற்கு வந்து இருப்பது இதன் மூலம் தெளிவாகி இரு