ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை ஒருமையில் விமர்சனம் செய்த நாஞ்சில் சம்பத் மீது கடுமையான விமர்சனங்கள் மற்றும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன, இந்த சூழலில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியை சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா நாஞ்சில் சம்பத்தை நோக்கி கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார் அதில்., நாஞ்சில் சம்பத் அவர்களே நீங்கள் நிறைய அதிமுக மேடையில் பேசி உள்ளீர்கள்,தற்போது திமுக மேடையில் பேசி வருகிறீர்கள்.
எத்தனை முறை ஜெயலலிதா அம்மையார் அவர்களை "அவள்" என்றும் மு.க.ஸ்டாலின் அவர்களை " அவன் "என்றும் பேசி உள்ளீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? என நெத்தியடியாக கேள்வி எழுப்பியுள்ளார் இதுகுறித்து அவர் முழுமையாக குறிப்பிட்டவை பின்வருமாறு :-
பெண் ஆளுநரை "அவள்" என்று பேசியதற்கு நாஞ்சில் சம்பத் அவர்கள் கொடுத்த விளக்கம் வேடிக்கையானது , இலக்கியம் பயின்றால் அப்படித்தான் "அவள்" என்று கூறுவாராம்.நாஞ்சில் சம்பத் அவர்களே நீங்கள் நிறைய அதிமுக மேடையில் பேசி உள்ளீர்கள்,தற்போது திமுக மேடையில் பேசி வருகிறீர்கள். எத்தனை முறை ஜெயலலிதா அம்மையார் அவர்களை "அவள்" என்றும் மு.க.ஸ்டாலின் அவர்களை " அவன் "என்றும் பேசி உள்ளீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?
இலக்கியம் வேறு இயல்பு வேறு என்று கூட புரியாதா உங்களுக்கு? இலக்கியத்தோடு பேசுவது எதிரியை விமர்சிக்கும் போது மட்டும்தானா?நீங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்காக பேசும்போது இலக்கியத்தை அடமானத்திற்கு வைத்துவிடுவீர்களா?
தைரியம் இருந்தால் திமுக மேடையில் இலக்கிய வடிவில் பேசி காட்டவும் அப்போது ஒப்பு கொள்கிறோம் உங்களது விளக்கத்தினை.தமிழுக்கே இழுக்காக தெரிகிறது உங்களது அழுக்கான பேச்சு என நாஞ்சில் சம்பத்தை வறுத்து எடுத்துள்ளார் ராஜேஸ்வரி பிரியா.