24 special

அருணாச்சலம் படம் முடியும் வரைக்கும் ரஜினி விடாத ஒரு புது கேட்டபழக்கம்.. கசிந்த ரஜினி பற்றிய தகவல்....

Rajini
Rajini

தமிழ் சினிமாவில் என்றுமே மாற்ற முடியாத மறுக்க முடியாத ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் என்றால் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! இவர் எண்பதுகளில் தனது சினிமா பயணத்தை வில்லனாக தொடங்கினாலும் காலப்போக்கில் ஹீரோவாக கலக்கி தன் தனி ஸ்டைலில் எக்கச்சக்க ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். மேலும் தனது இளமை காலத்தையும் தாண்டி இன்றளவும் இன்றைய காலங்களில் உள்ள இளைஞர்களை கவரும் வகையான படங்களிலும் நடித்து இக்காலத்தில் உள்ள இளைஞர்கள் பலரையும் தன் ரசிகர் பட்டாளத்தில் இழுத்து வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார் அப்படிப்பட்ட ஒரு ஈர்ப்பு விசையையும் தனி ஸ்டைலையும் தனக்கே கொண்டிருக்கிறவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் மிகை ஆகாது! இவரைக் குறித்து எந்த சினிமா நடிகரிடமும், சினிமா பிரபலங்களிடம் கேட்டாலும் அவர்கள் சூப்பர் ஸ்டாரை சந்தித்த முதல் அனுபவம் சூப்பர் ஸ்டாரிடம் தனக்கு கிடைத்த மறக்க முடியாத அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள் அவை ஒவ்வொன்றை கேட்கும் பொழுது சூப்பர் ஸ்டாரின் மதிப்பும் அவர் மீது வைத்திருக்கும் மரியாதையும் அதிகரித்துக் கொண்டே தான் செல்லும். 

 இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முக்கிய திரை பிரபலமான கிரேசி மோகனின் சகோதரர் மாது பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் குறித்து சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார். அதாவது ஒருமுறை எனது சகோதரர் மோகனுக்கு லேண்ட்லைனில் போன் வந்தது. உடனே என் சகோதரர் போனை எடுத்து பேசும் பொழுது, ரஜினி பேசுகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் மோகன் ரஜினிகாந்த் பேசுகிறார் என்பதை நம்பாமல் சும்மா விளையாடாதீங்க என்று மிரட்டி உள்ளார். அதே மாதிரி எங்களுடைய பசங்க எல்லாம் இதுபோன்று மோகனை கிண்டல் செய்வார்கள் அதனால் மோகனும் ரஜினி தான் அழைத்தார் என்பதை நம்ப முடியாமல் பேசிக் கொண்டிருந்தார். 

அதற்கு ரஜினிகாந்த் மீண்டும் ஒருமுறை நான் ரஜினி தான் பேசுகிறேன் நேற்று அவ்வை சண்முகி படம் பார்த்தேன் சார் ரொம்ப நல்லா பண்ணி இருந்தீங்க அதுக்காக தான் இப்போ உங்களை கூப்பிட்டேன் என்று கூறிய பிறகே மோகன், பேசுவது ரஜினிகாந்த் என்பதை நம்பினான். பிறகு அவ்வை சண்முகில் நீங்கள் பண்ண வேலை மிக அருமையாக இருந்தது நாமும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று சூப்பர் ஸ்டார் கேட்டதற்கு கண்டிப்பா பண்ணலாம் என மோகன் கூறினான். இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் நீங்கள் நாளை வந்து என்னை சந்திக்க வேண்டும் நாம் அருணாச்சலம் என்கின்ற ஒரு படம் பண்ணப் போகிறோம், சுந்தர் சி ஒரு படத்தை வைத்திருக்கிறார் அந்த படத்திற்கு வசனங்கள் நீங்கள் எழுத வேண்டும் என்று மோகனை சூப்பர் ஸ்டார் கேட்கிறார்.

 அப்பொழுது மோகன், சார் ஒரே ஒரு ரெக்வஸ்ட் நான் கமலஹாசன் அவர்களிடம் கேட்டுவிட்டு அனுமதி பெற்ற பிறகு தான் இந்த படத்திற்கு வேலை செய்வேன் என மோகன் சூப்பர்சாரிடம் கேட்கிறார். அதற்கு ரஜினிகாந்த் அவர்கள், இந்த திரையுலகில் இப்படிப்பட்ட ஒருவரை நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன் நீங்கள் தாராளமாக அவரிடம் அனுமதி பெற்ற பிறகு வரலாம் என மோகனிடம் சூப்பர் ஸ்டார் கூறிவிடுகிறார். அதற்குப் பிறகு கமலஹாசன் இடம் சென்று மோகன் இதைப் பற்றி கூறுவதற்கு முன்பாகவே கமலஹாசனே சூப்பர் ஸ்டார் அருணாச்சலம் படமா என கேட்க எப்படி சார் உங்களுக்கு தெரியும், அவர் என்கிட்ட சொல்லிட்டாரு என கமலஹாசனும் கூறுகிறார். எதற்காக நீங்கள் என்னிடம் அனுமதி பெற்ற பிறகே பணியாற்றுவேன் என்று கூறினீர்கள். நீங்கள் தாராளமாக பணியாற்றலாமே ரஜினிகாந்த் படம் கல்யாண விருந்து போல இருக்கும் போய் தாராளமா பண்ணுங்க என்று கமலஹாசன் மோகனிடம் கூறியுள்ளதாக மோகனின் சகோதரர் மாது பாலாஜி தெரிவித்துள்ளார். 

மேலும் ரஜினி அந்த படத்திற்கு வசனம் எழுத கிரேசி மோஹனை வீட்டுக்கு அழைத்தால் தொடர்ச்சியாக வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் உள்ள கிரேசி மோகனுக்கு அது தர்ம சங்கடமாகியுள்ளது.. ஏனெனில் ரஜினி வீடு இவ்ளோ சுத்தமாக இருக்கிறதே அங்கு எப்படி வெற்றிலை பாக்கு போட்டு துப்புவது என அதற்காகவே ரஜினியும் கிரேசி மோகனுக்கு படம் முடியும் வரை கம்பெனி கொடுக்கும் வகையில் அருணாச்சலம் படம் முடியும் வரை வெற்றிலை பாக்கு புகையிலை போடும் பழக்கத்தை வைத்துள்ளார் என மாது பாலாஜி உண்மையை போட்டு உடைத்துள்ளார்... இந்த தகவல் இணையங்களில் தீயாக பரவுகிறது...