24 special

பதிலடி கொடுங்கள்..! பிஜேபி தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆவேசம் !

Jp naata and bjp
Jp naata and bjp

புதுதில்லி : பிஜேபி இளைஞரணி தலைவராக இருப்பவர் தஜிந்தர் பாஹா. இவரை கடந்த இருதினங்களுக்கு முன்னர் பஞ்சாப் காவல்துறை டெல்லியில் உள்ள தஜிந்தர் இல்லத்தில் வைத்து கைது செய்தது. மேலும் கைது முயற்சியில் தஜிந்தரின் தந்தை முகத்தில் தாக்கப்பட்டார். இந்த கைதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக பிஜேபி குற்றசாட்டை முன்வைத்தது.


இந்நிலையில் தஜிந்தரை கைது செய்த பஞ்சாப் காவல்துறை ஹரியானாவை கடக்கையில் ஹரியானா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் தஜிந்தரை ஹரியானா காவல்துறை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இதனிடையே தஜிந்தரின் தந்தை அளித்த புகாரின்பேரில் டெல்லி போலீசார் பஞ்சாப் போலீசார் மீது ஆட்கடத்தல் வழக்கு பதிவுசெய்தனர்.

ஹரியானா விரைந்துசென்ற டெல்லி காவல்துறை தஜிந்தரை பத்திரமாக மீட்டது. இதுகுறித்து பஞ்சாப் அரசு நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் மற்றும் ஹரியானா காவல்துறை செயல்பாடுகள் குறித்து முறையிடப்போவதாக அறிவித்தது. நேற்று சனிக்கிழமை இரவு பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் மறுஉத்தரவு வரும்வரை தஜிந்தர் பாஹா மீது எந்தவொரு நடவடிக்கையும் பஞ்சாப் போலீசார் எடுக்க கூடாது என உத்தரவிட்டது. இந்த தகவலை பிஜேபி பெங்களூர் எம்பியான தேஜஸ்வி சூர்யா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் நேற்று டெல்லி பிஜேபி மூத்த நிர்வாகிகளை தேசிய தலைவர் ஜேபி நட்டா சந்தித்தார்.

இந்த கூட்டத்தில் தேசிய துணைத்தலைவர் பைஜெயந்த் ஜெய் பாண்டா ஜெனரல் செகரட்டரி சித்தார்த்தன் மற்றும் டெல்லி பிஜேபி தலைவர் அதேஷ் குப்தா உள்ளிட்டோர் பங்குபெற்றனர். கூட்டத்தில் பேசிய நட்டா தஜிந்தர் கைதின்போது கட்சி எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். மேலும் டெல்லி அரசின் குளறுபடிகள் குறைபாடுகளை மக்களுக்கு எடுத்துசெல்லவேண்டும் என கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் "ஆம் ஆத்மீக்கு தக்க பதிலடி கொடுங்கள். புள்ளிவிவரங்களுடன் பேசுங்கள். வரப்போகிற தேர்தலுக்கு நமக்கான பாதையை உருவாக்குங்கள். கைது நாடகம் குறித்த உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள். பொய்களை தகர்த்தெறியுங்கள். அவர்கள் நாம் யார் என உணரவேண்டும்" என நட்டா தெரிவித்தார்.