தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் தங்கள் சித்தாந்தத்தை பரப்பி விடலாம் என திராவிட கழகம் இன்னும் பிற அமைப்புகள் கணக்குபோட்டு வேலை செய்தனர் ஆனால் அவர்கள் நெஞ்சில் இடியாய் விழுந்த செய்தி ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது, தருமை ஆதினம் பல்லக்கு செல்ல விதித்த தடையை தமிழக அரசு நீக்கியுள்ளதாக தருமை ஆதினம் தெரிவித்துள்ளார்.
தருமை ஆதினம் பல்லக்கு நிகழ்ச்சியை தடை செய்து உத்தரவு வெளியான போது வீரமணி முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் அதோடு நிற்காமல்.நீண்ட அறிக்கை வெளியிட்டார், அந்த அறிக்கையில் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மனிதனை மனிதன் சுமக்கும் - மனித உரிமைக்குக் கேடான ஒரு செயலை எப்படி அனுமதிக்க முடியும்? மதத்தின் பெயரால் நடந்தாலும் சரி, வேறு அடிப்படையில் நடந்தாலும் சரி இது போன்ற அடிமை முறைகளை அனுமதிக்க முடியாது.
அதிலும் அரசு தலையிட்டு அனுமதி மறுப்பது - அரசின் தலையாய கடமையாகும். அந்தக் கடமையை மிகச் சரியாக செய்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை வெகுவாகப் பாராட்டுகிறோம்.மடத்துக்குள் சடங்கு சமாச்சாரங்களை செய்துகொள்ளட்டும்; மக்கள் மத்தியில் “மனித வதையான” பல்லக்குச் சவாரியை சுயமரியாதையும், மனித சமத்துவமும் மானமும் உள்ள எவரும் அனுமதிக்க மாட்டார்கள்.
தமிழ்நாடு அரசுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள். ஏதோ அவ்வப்போது நடக்கும் - மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்குச் சவாரிகளைத் தடை செய்வதை விடவும் மனித உரிமைக்கு எதிரானதும் - மனித வதையுமான இத்தகைய சவாரிகளை நிரந்தரமாக சட்ட ரீதியாகத் தடை செய்ய ஆவன செய்ய வேண்டு மாய்க் கேட்டுக் கொள்கிறோம். வற்புறுத்துகிறோம் என பாராட்டு பத்திரம் வாசித்தார்.
ஆனால் தற்போது பட்டினம் பிரவேசம் செல்ல தருமை ஆத்தினத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கபட்ட சூழலில் வீரமணி போன்றவர்கள் வாய் திறக்காமல் அமைதியாவிட்டனர். தருமை ஆதினம் பல்லக்கு விவகாரத்தில் பெரிதாக எதிர்ப்புகள் கிளம்பாது என இருந்த நேரத்தில், அதிரடியாக மதுரை ஆதினம், அண்ணாமலை, அதிமுக இன்னும் பிற அமைப்புகள் ஒன்று சேர்ந்தது.
மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை நானே நேரடியாக சென்று பல்லக்கு தூங்குவேன் என தெரிவிக்க விவகாரம் பெரிய அளவில் செல்ல வேறு வழியின்றி தமிழக அரசு பல்டி அடித்ததாக கூறப்படுறது. மொத்தத்தில் முன்பு திராவிட கழகங்கள் கையில் இருந்த போராட்ட குணங்கள் தற்போது தமிழகத்தில் இந்து அமைப்புகள் கையில் வந்து சேர்ந்து இருக்கிறது.
பட்டினம் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும் என்ற அறிவிப்பு இப்போது திராவிடம் கழகம் மற்றும் பெரியாரிஸ்ட்கள் தூக்கத்தை கெடுத்துள்ளது.