தமிழகத்தில் பாஜகவினர் தங்களுக்கு எதிர்க்கருத்து தெரிவிக்கும் அரசியல் தலைவர்களுக்கு முறையாக அவர்கள் பாணியில் பதிலடி கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தற்போது பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பதிலடி வாங்கியுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்துள்ளார் அதில் மேகதாது அணை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளது என திருமாவளவன் தெரிவித்தார் எனவே உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த சூழலில்தான் நாராயணன் திருப்பதியிடம் இருந்து பதிலடி கிடைத்துள்ளது, நாராயணன் திருப்பதி குறிப்பிட்ட கருத்து பின்வருமாறு :-உச்சநீதி மன்ற தீர்ப்பை மீறி கர்நாடக அரசு,மேகதாது அணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளது : தொல்.திருமாவளவன்.
வன்மையாக கண்டிக்கிறோம். மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்காது! அதே போல், உச்சநீதி மன்ற உத்தரவை மீறி தமிழக அரசு நீட் தேர்வு கூடாது என்ற மசோதாவை தாக்கல் செய்துள்ளதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார், அதாவது உச்ச நீதிமன்ற. தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு செய்தது தவறு என்றால் அதே தவறை தமிழக அரசும் செய்வது தவறு தானே என கேட்டுள்ளார் நாராயணன் திருப்பதி.மொத்தத்தில் எதிர்க்கட்சிகள் எந்த பக்கம் சென்றாலும் பாஜகவினர் கேள்விகள் மூலம் கேட் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.