
அமெரிக்கா விதித்துள்ள புதிய வர்த்தக வரிகள் காரணமாக, இந்தியாவின் ஏற்றுமதிகள் சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டாலோ “இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கச் சந்தையில் நுழைய சிக்கல் ஏற்பட்டாலோ ரஷ்யா தனது சந்தையை திறந்து வைத்து வரவேற்கும்” என்று ரஷ்யத் தூதரகம் தெரிவித்துள்ளது.இது அமெரிக்காவுக்கு நேரடி சவாலாகவே பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் சீனா தனது வர்த்தக கதவுகளை திறந்துவிட்து தற்போது ரஷ்யாவும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிது. இது அமெரிக்காவின் வர்த்தகத்தை பாதிக்கும் என அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துளார்கள். ஏற்கனவே அமெரிக்காவில் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அமெரிக்க மக்கள் டிரம்ப் மீது கடுப்பில் உள்ளார்கள். இந்த நிலையில் அமெரிக்கா ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மாற்ற நாடுகளை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டது. .
இந்தநிலையில் அமெரிக்கா மீது மேலும் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளது ரஸ்யா இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கச் சந்தையில் நுழைய சிக்கல் இருந்தால், ரஷ்யச் சந்தை இந்திய ஏற்றுமதிகளை வரவேற்கும். தடைகள் விதிப்பவர்களையே பாதிக்கின்றன. இது இந்தியாவுக்கு ஒரு சவாலான சூழல், ஆனால் எங்கள் உறவுகள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. வெளியுறவு அழுத்தங்கள் இருந்தபோதிலும், இந்தியா-ரஷ்யா எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்று பாபுஷ்கின் கூறினார்.
மேலும் அவர்க கூறுகையில் ரஷ்யா இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்பதையும், இந்தியாவின் தேவைகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இது இரு நாடுகளின் பொருளாதாரங்களுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும், இந்த ஒத்துழைப்பு தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் : 25% கூடுதல் வரி என டிரம்ப் கூறியபோதிலும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை தொடரும் என ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா அச்சுறுத்திய போதிலும் இந்தியா தங்களிடம் கச்சா எண்ணெய் வாங்கும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது. சர்வதேச விலையை விட 5% குறைவான விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷ்யா விற்கிறது.என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கம் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தில் பங்கேற்க வரும் செப்டம்பரில் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார். நியூயார்க் நகரில் இந்தக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வின் தற்காலிகப் பேச்சாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியப் பிரதமர் செப்டம்பர் 26 அன்று காலை உரையாற்றுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் தலைவர்களும் அதே நாளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பொது விவாதத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
மோடியின் இந்த அமெரிக்கப் பயணம், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அமெரிக்கா 50% வரிகளை விதித்திருக்கும் நேரத்தில் நடைபெறுகிறது. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி, 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த மாத இறுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அஜித்தோவால், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்தியா, சர்வதேச அழுத்தத்திலும், பொருளாதார சிக்கல்களிலும் தன்னைத்தானே நிலைநிறுத்தி, உலக வணிக மற்றும் அரசியல் மேடையில் சக்திவாய்ந்த, தன்னம்பிக்கை மிக்க நாடாக தன்னை நிரூபித்துள்ளது.இந்தியாவின் ஆற்றலும், வலிமையும், தன்னம்பிக்கையும் உலக நாடுகளுக்கு முன்னோடி மாதிரியாக இருக்கிறது.