24 special

உக்ரைனில் மர்ம ஆட்டத்தை தொடங்கியது ரஷ்யா?.. அடுத்தது என்ன?

Russian and ukaraine
Russian and ukaraine

பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் உக்ரைன் போரில் நடைபெற்றுவரும் சில சம்பவங்கள் குறித்து தனக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்துள்ளார் அது பின்வருமாறு :-உக்ரைனில் ரஷ்யா சரியான இலக்கினை தாக்க தொடங்கிவிட்டது, அதே நேரம் இதர இடங்களிலும் மர்ம ஆட்டம் ஆரம்பித்தாயிற்று.


உக்ரைனில் நேட்டோ மற்றும் அமெரிக்க படைகள் ரகசியமாக நிற்பது எல்லோரும் அறிந்தது, மேற்கு உக்ரைனில் இருந்து அவர்கள்தான் வியூகம் வகுக்கின்றார்கள், அவர்களுக்கு போலந்து எல்லையில் இருந்து வரும் ஆயுதங்கள் சேர்கின்றன அவற்றை எப்படி இயக்குவது எனும் பயிற்சி எல்லாம் அவர்களால் வழங்கபடுகின்றது.

இந்த ஆயுதங்கள்தான் ரஷ்யா டாங்கிகளுக்கு எமனானவை, ரஷ்ய விமானங்களையும் பதம்பார்ப்பவை இவை மிக தந்திரமாக போலந்து எல்லை அருகே உக்ரைனுக்குள் அமைக்கபட்டிருக்கும், ஏதும் சிக்கல் என்றால் போலந்துக்குள் ஓடிவிடலாம்

ரஷ்யா நேற்று இந்த முகாம்களை போலந்து எல்லையில் தகர்த்திருக்கின்றது, அதில் வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளும் கொல்லபட்டிருக்கலாம் என்பதால் விஷயம் பெரிதாகின்றது, ஆனால் எந்த நாடும் தங்கள் ராணுவத்தார் உக்ரைனுக்குள் இறந்ததை வெளிசொல்லமுடியா சிக்கல் இது என்பதால் ரஷ்யாவுக்கு சாதகமான நிலை இது.

ரஷ்யாவின் தாக்குதல் பெரும் வெற்றி, அவர்கள் ஏவுகனை சரியாக நிலையங்களை தகர்த்தெறிந்திருக்கின்றது, இது மேலை நாடுகளுக்கு பலத்த அடி அப்படியே போலந்தை நோக்கி "எம் ஏவுகனை கொஞ்சம் வழி தவறினாலும் உனக்கு சிக்கல்தான்" என எச்சரிக்கின்றது ரஷ்யா.

உக்ரைனில் ரஷ்யா அடித்த சரியான அடி இதுதான், இங்கு அடிவிழும்பொழுதே ஈராக்கிலும் இதர அரபு நாடுகளிலும் அமெரிக்க தூதரகமும் நிலைகளும் தாக்கபடுகின்றன, அமெரிக்கா உக்ரைன் யுத்தத்தை முன்னிட்டு அரேபியால் தன் பிடியினை குறைத்திருந்தது அதில்தான் இப்பொழுதுஅடி விழுகின்றது.

ரஷ்யாவுக்கு அரேபியாவில் பல நண்பர்கள் ஈரான் சிரியா போல உண்டு, அவர்கள் இதுதான் சரியான நேரம் என அமெரிக்காவினை துவைக்க ஆரம்பித்துவிட்டார்கள் இனி இரு இடங்களை அமெரிக்கா கண்காணிக்க வேண்டும்.

இப்போதைக்கு உக்ரைனுக்கு ஆயுதம் வரும் வழியினை கண்டறிந்து அடிக்க தொடங்கியிருக்கின்றது ரஷ்யா இனி போரின் போக்கு மாறலாம், உக்ரைனை தூண்டிவிட்ட நாடுகளெல்லாம் இப்பொழுது யோகியிடம் அடிபட்ட எதிர்கட்சிகள் கம்மென்று இருப்பது போல மிக கமுக்கமாக இருப்பதுதான் ஹைலைட் என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.