சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் கள நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார், இதில் தலைமை செயலாளர், சட்டம் ஒழுங்கு டிஜிபி, முதல்வரின் தனி செயலாளர்கள் இன்னும் பிற அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு இருக்கிuறார்கள்.
இந்த ஆலோசனையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து, முதல்வர் ஸ்டாலின் அரசு அதிகாரிகளிடம் கேட்டு இருக்கிறார், கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறைக்கு இறையான சம்பவம் தேசிய அளவில் தமிழகத்திற்கு தலை குனிவை உண்டாக்கி இருப்பதாக பல மூத்த அரசியல் ஆலோசகர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோர் முதல்வருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.
இந்த சூழலில் இனி ஒரு முறை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடாமல் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறீர்கள் என முதல்வர் ஸ்டாலின் கண்டிப்புடன் கேள்வி எழுப்பி இருக்கிறார், இந்த சூழலில் தான் தமிழகத்தில் நடைபெறும் போராட்டம், வன்முறை போன்றவைக்கு சமூக வலைத்தளங்களே முக்கிய காரணமாக அமைகின்றன.
கள்ளக்குறிச்சி கலவரம் உட்பட பல சம்பவங்களுக்கு சமூக வலைத்தளத்தை தவறாக பயன்படுத்தும் நபர்களால் மட்டுமே உருவாகிறது என அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது, இந்த சூழலில்தான் சமூகவலைத்தளத்தை கண்காணிக்க குழு அமைப்பது என்றும் தவறாக கலவரத்தை உண்டாக்கும் வகையில் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என முதல்வர் தெரிவித்து இருந்தாராம்.
இதையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கடந்த செப்டம்பர் 5 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில்.யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் தமிழ்நாட்டில் கண்காணிக்கப்படும். இதில் தவறான தகவல்கள் , பொய்யான செய்திகளை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடையே குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இதை பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள, விசாரணை நடத்த, கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார் மேலும் .
இதற்காக தமிழ்நாடு முழுக்க 37 மாவட்டங்களில் குழு அமைக்கப்பட உள்ளது. சென்னை உட்பட 9 மாநகரங்களிலும் சிறப்பு குழுக்கள் செயல்படும். மொத்தம் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட குழுவாக இது செயல்படும். இவர்கள் சமூக வலைத்தளங்களை கண்காணிப்பார்கள். இணைய வழியில் பாலியல் குற்றங்கள், பொய்யான தகவல்களை பரப்புதல், வதந்திகளை ஏற்படுத்துதல் போன்ற செயல்களுக்கு எதிராக இதில் நடவடிக்கை எடுக்கப்படும். என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கையில் குறிப்பிட்டார்.
இங்குதான் பிரச்சினையே தொடங்கி இருக்கிறது தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி அறிக்கை விடுத்த மறு நாளே., இது நிச்சயம் ஆளும் கட்சி பிரமுகர்கள் தவறாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டாலோ அல்லது ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சிகள் கிளப்பின..,
அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்து இருக்கிறது, திமுக சட்டமன்ற உறுப்பினர் TRB.ராஜா பதிவு அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்து கடவுள்களை இழிவு படுத்துவது போன்று கருத்துக்களை பதிவிட்டு இருந்தார், இது பலத்த சர்ச்சையை உண்டாக்கியது. ஒரு கட்டத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க பல இந்து அமைப்புகள் தயாராகின.
இந்த சூழலில்தான் TRB.ராஜா அவரது பதிவை நீக்கினார், இருப்பினும் கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கிலும் இரு பிரிவினர் இடையே மோதலை உண்டாக்கும் நோக்கிலும் செயல்பட்ட TRB ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கனல் கண்ணனை கைது செய்த காவல்துறை திட்டமிட்டு சமூக வலைதளத்தில் வன்மத்தை பரப்பிய திமுக MLA மீது நடவடிக்கை எடுக்கமால் இருக்க என்ன காரணம் என கேள்விகள் எழுந்தது, இது குறித்து டிஜிபி கவனத்திற்கு சென்றதாகவும் அவர் என்ன நடவடிக்கை எடுப்பது, ஒரு ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே இவ்வாறு ஈடுபட்டால் நாம் அமைத்த குழுவிற்கு என்ன பயன், எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பாதா என வேதனை அடைந்து இருக்கிறாராம்.
உடனடியாக முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட, பல்வேறு நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது, ஏற்கனவே தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் அரசு பூஜை விழாவில் இந்து முறைப்படி ஏன் பூமி பூஜை நடத்தவேண்டும் என பிரச்னையில் ஈடுபட்ட சம்பவமே கடும் சர்ச்சையை உண்டாக்கியது, திமுகவை சேர்ந்த மூத்த தலைவர்களே செந்திலுக்கு எதிராக திமுக தலைமையிடம் புகார் கொடுத்த சூழலில் இப்போது அடுத்த பஞ்சாயத்தை தொடங்கி வைத்து இருக்கிறார் MLA ராஜா.
ஏற்கனவே திமுக இந்துக்கள் நம்பிக்கைக்கு எதிரான கட்சி என பலர் குற்றம் சுமத்தி வரும் சூழலில் சொந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர்களே 2024 நாடாளுமன்ற தேர்தல் உலை வைத்து விடுவார்கள் என சற்று கலக்கம் அடைந்து இருக்கிறதாம் திமுக தலைமை.