வீரப்பன் காட்டிற்குள் நாகப்பாவை கடத்தியவருக்கு நடிகை நயன்தாராவை தூக்கி செல்ல எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் இன்றி நகைச்சுவையாக பேசியது சர்ச்சையாகி உள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வாரியாக சென்று நாடாளுமன்ற தேர்தல் குறித்து பொது கூட்டம் ஏற்பாடு செய்து வருகிறார். நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் தொண்டர்களையும், நிர்வாகிகளும் சந்தித்து பேசினார் அப்போது சீமான் திமுக அரசை சரமாரியாக சாடி பேசினார்: சந்தனமரங்கள் தான் பெரிய அளவில் வருவாயை கொடுத்தன. சந்தன மரங்கள் வளர்க்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
எங்க ஆளு( வீரப்பன்) இருந்த வரை மரங்கள் பாதுகாப்பாக இருந்தது. ஆனால், அவர் மீது சந்தன மரங்களை வெட்டிட்டாரு, காடுகளை அழிச்சிட்டாரு, யானைகளை கொன்றாருன்னு அநியாயமாக பழிபோடுகிறார்கள்.அவர் இருந்த போது காடு பாதுகாப்பாக இருந்தது. அவரு இருந்து இருந்தால் காவிரி நிலைமை வந்து இருக்குமான்னு யோசித்து பார்க்க வேண்டும். சந்தனமரங்களை வெட்டி வித்தாரு, ஏத்துக்கிறேன். யானை தந்தங்கள் கடத்தி வித்தாரு ஏத்துக்கிறேன். ஆனால் வித்தவரு காட்டுக்குள்ள இருந்தாரு. வாங்கனவங்க எங்கே இருக்காருன்னு சொல்லமாட்றீங்களே. சந்தனமரங்களை விற்று காட்டுள்ள பெரிய பெரிய பங்களா கட்டினாரா?
காட்டுக்குள்ள சாராயம் காய்ச்சினாரா, புகைப்பிடித்தாரா, கட்டிய மனைவி தவிர வேறொரு பொண்ணை தூக்கிட்டு போனாரா..? நாகப்பாவை கடத்துனவருக்கு நயன்தாரா தூக்கிட்டு போக தெரியாதா? அவர் தமிழன் மாண்போடு வாழ்ந்தவர். அவர் வெளியே வந்து பேசினால் பலர் சிக்க கூடும் என்பதால் கொலை செய்யப்பட்டார்” என்றார். நயன்தாராவை இதில் பேசியது ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி சமூக தளத்தில் சீமானை வஞ்சித்து வருகின்றனர். தொடர்ந்து பேசிய சீமான்: திருப்பத்தூர் மாவட்டத்தில் 2019ம் ஆண்டு பஞ்சாயத்து தலைவராக தேர்தலில் வெற்றி பெற்ற பட்டியலின பெண்ணை இது வரை பதவி பிரமாணம் செய்து வைக்காமல் இருப்பது தலைகுனிய வைக்கும் செயல் ஆகும்.
இந்த செயல் அந்த பெண்மணிக்கு அவமானமாக கருத கூடாது. இந்த செயல் தேசிய இனத்திற்கான அவமானமாக தான் பார்க்க வேண்டும். இவர்கள் ஆட்சியில் மட்டும் தான் இது போல நடக்கிறது. கொடி ஏற்ற விடுவதில்லை இதுல சனாதனம் ஒழிப்பது பற்றி பேசி வருகின்றனர். சும்மா வெட்டியாக பேசி வருகிறார்கள். இந்த பிரச்னை வெளியில் வராமல் இருந்தது அதன் பின் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளிப்படுத்தினர் அதன் பிறகாவது அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் அல்லவா அதனை கண்டு கொள்ளவே இல்லை இது வெட்கி தலைகுனி வேண்டிய செயலாகும். என்று திமுகவை விமர்சித்து பேசினார்.