அண்ணனைத் தொடர்ந்து தம்பியை அமலாக்கத்துறை தூக்கப்போவதால் ஒட்டுமொத்த கரூரையும் ரகசிய வேவு பார்க்கும் ஆட்கள் சல்லடைபோட துவங்கியுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் அப்பொழுது அவர் கையாண்ட பண மோசடியால் அவர் மீது சட்ட வழக்கு பாய்ந்தது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் அதனை விசாரிக்க அமலாக்க துறைக்கு தடை விதித்திருந்தது. இதற்கு அடுத்து தற்போது திமுக ஆட்சியிலும் திமுகவில் இணைந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்த பதவியிலும் டாஸ்மாக்கில் ஊழல் புரிந்துள்ளதாக அவர் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஐ டி ரெய்டு கடந்த மாதம் அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்றது.
பிறகு சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு விதித்த தடையை நீக்கியதற்கு பின்பு இரண்டு தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அவரது சொந்த வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டது. மேலும் அவரை விசாரிக்க அமலாக்க துறையினர் கைது செய்யவும் முற்பட்டனர் ஆனால் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தற்போது காவிரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக துப்பாக்கி ஏந்திய படை வீரர்களின் பாதுகாப்பில் ஒரு கைதியாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி அதிகமாக மேற்கொண்ட பண பரிமாற்றம் மற்றும் கரூர் மாவட்டத்தில் வாங்கி குவிக்கப்பட்டு சொத்துக்கள் அனைத்துமே தனது தம்பி அசோக்கின் பெயரில் தான் செய்து வந்தார் என அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் வீட்டில் மேற்கொண்ட ரெட்டின் மூலம் கண்டுபிடித்துள்ளது. மேலும் வருமான வரி துறையும் அசோக் என்பவரின் சொத்து மதிப்பு, ஆவணங்கள் மற்றும் கரூரில் அசோக்கின் மனைவி பெயரில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட வீடு என பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளதால், தற்போது செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கும் சமயம் அவரது தம்பி அசோக்கிடம் மேலும் பல உண்மைகளை தெரிந்து கொள்வதற்காக அமலாக்கத்துறை அசோக்கிற்கு சம்மன் அனுப்பி உள்ளது. அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தேசிய அளவில் பேசும் பொருளாக மாறியதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது மது பிரியர்கள் டாஸ்மார்க் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு பத்து முதல் 30 ரூபாய் வரை அதிகம் வைத்து விற்கப்படுவதை வீடியோக்களாக எடுத்து பதிவிட்டதே! அந்த வீடியோக்களில் டாஸ்மார்க் ஊழியர்களிடம் பொதுவாக ஏன் இப்படி அதிக ரூபாய் வைத்து விற்கிறீர்கள் என்று கேட்டதற்கு மேலிடத்தில் விற்க கூறியுள்ளனர் இப்படி விற்கப்படும் பாட்டில்கள் மூலம் கிடைக்கும் பணங்கள் அனைத்தையும் ஒரு கும்பல் வந்து எங்களிடம் வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.
மேலும் எங்களுக்கு டார்கெட் வைத்தும் மது பாட்டில்களை விற்பனை செய்ய ஆணையிட்டு வருகின்றனர் ஏன் என்று கேட்டால் எங்களை மிரட்டுகிறார்கள் என்று கூறியிருந்தனர். டாஸ்மார்க் ஊழியர்கள் ஒரு கும்பல் என்று குறிப்பிட்டது கரூர் கேங்க்தான் என்றும் அதற்குப் பின்னணியில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அசோக், செந்தில் பாலாஜியை கைது செய்யப் போகிறார்கள் என்று தெரிந்த உடனேயே தலைமறை ஆகிவிட்டார் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளித்த மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரும் அசோக் தலைமறைவாகி விட்டார் என்று வேறு தகவல் கூறியுள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள அசோக்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதால் விரைவில் அவரும் பிடிபடுவார் எனவும், அவர் கைது செய்யப்பட்டால் இன்னும் வெளிவராத தகவல்கள் வெளிவரும் எனவும் செய்திகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.