24 special

ஆழம் தெரியாமல் கால்லை வைத்து மாட்டி கொண்டு முழிக்கும் செந்தில் பாலாஜி...!

Senthil balaji
Senthil balaji

வைக்கக்கூடாத இடத்தில் கைவைத்து அதன் விளைவாகத்தான் தற்போது செந்தில்பாலாஜி கைது வரைக்கும் சென்றுள்ளார் இன்னும் பல பாதிப்புகள் வரும் எனவும் பல பரபர தகவல்கள் கிடைத்துள்ளன.


ஐந்து கட்சிகள் மாறி வந்த செந்தில் பாலாஜி மீது பல புகார்கள் குவிந்துவந்து கைது செய்யப்படாமல் இருந்ததும் வழக்குகளில் தப்பித்து வந்ததும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி தப்பித்து வந்ததும் பல காலமாக வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை கண்களை உறுத்தியுள்ளது. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுகவில் பவர் சென்டரில் இருந்து, மேலும் திமுகவின் மற்ற சீனியர் அமைச்சர்கள் எல்லாம் ஒரு துறையை வைத்திருந்த பொழுது இவர் மட்டும் டாஸ்மார்க் மற்றும் மின் துறை என இரண்டு பெரும் பணம் புழங்கும் துறையை கையில் வைத்துக் கொண்டு, கிட்டத்தட்ட திமுகவில் துணை முதல்வர் போல வலம் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி வைக்க கூடாத இடத்தில் கை வைத்ததாலையே இப்படி ஐடி மற்றும் அமலாக்க துறையின் முக்கிய பார்வை பட்டு விசாரணைக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு அழுது புரண்டு நெஞ்சு வலியால் கதறி தற்போது வெளி நிலவரம் என்னவென்று தெரியாத அளவிற்கு பலத்த பாதுகாப்பில் இருந்து வருகிறார் என திமுகவினரே பேசிக்கொள்ளும் அளவிற்கு பெரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 

அதாவது 1996 - 2001ல் திமுக ஆட்சியில் இருந்த பொழுது அமைச்சர் பதவியில் பெங்களூர் பழனிசாமி என்பவர் இருந்தார் ஆனால் இவர் வடகோவையில் உள்ள திமுக அலுவலகத்திற்கு வந்து சென்ற பிறகு அவரது பதவி பறிக்கப்பட்டது, இதன் பிறகு பல்வேறு நிர்வாகிகளின் பதவிகள் மாற்றப்படுவதற்கு முன்பு இந்த வட கோவையில் உள்ள திமுக அலுவலகத்திற்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. திமுகவை பொருத்தவரையில் வடகோவையில் உள்ள அலுவலகத்திற்கு எந்த ஒரு அமைச்சர்கள் அல்லது நிர்வாகிகள் வந்து சென்றாலே அவருக்கு நிச்சயமாக ஏதாவது ஒரு பிரச்சனை நிகழும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.

என்னதான் வெளி உலகில் பகுத்தறிவாளர்களாக தங்களை காட்டிக் கொண்டாலும் திமுகவிற்கு இப்படி ஒரு செண்டிமெண்ட் கட்டிடம் இருக்கும் என்பதை இதுவரை யாரும் நினைத்து பார்த்திருக்க முடியாது ஆனால் தற்போது செந்தில் பாலாஜியின் நிலைமையால் அந்த செண்டிமெண்ட் செய்தியும் வெளியாகி கொங்கு மண்டலம் முழுவதும் பரவி வருகிறது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி எதற்காக அங்கு சென்றார்?  எப்போது சென்றார்? அதிமுக தலைமையில் கோவையில் அவிநாசி ரோட்டில் மிக பிரம்மாண்டமாக அவர்களது இதய தெய்வம் மாளிகை அமைந்துள்ளது ஆனால் அதே கோவையில் திமுகவின் அலுவலகம் மிகக் குறுகிய சாலையில் அமைந்துள்ளதால் அதனை இடமாற்றி கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக கலைஞர் அறிவாலயம் என்ற பெயரில் கோவை அவிநாசி ரோட்டில் லீ மெரிடியன் ஓட்டல் அருகில் மிகப் பிரம்மாண்டமாக திமுகவிற்கு அலுவலகம் கட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக கடந்த திங்கட்கிழமை அன்று வடகோவையில் உள்ள திமுக வின் அலுவலகத்திற்கு வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகளின் ரெய்டு நடைபெற்றது. பிறகு தற்போது செந்தில் பாலாஜி நிலைமை  என்ன என்பது தற்போது அனைவருக்கும் தெரியும்! இந்த பழைய ஆபீஸின் பழைய நினைவுகளை நினைத்துப் பார்த்த திமுகவினர் வடகோவையில் உள்ள திமுக வின் அலுவலகத்திற்கு வந்து சென்ற பிறகு செந்தில் பாலாஜிக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. 

திமுகவை போன்று அதிமுகவிலும் இதே போன்ற ஒரு செண்டிமெண்ட் நிலவி வருவதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கப்படுகிறது. கோவையில் அமைந்துள்ள அதிமுகவின் தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையிலும் எம்ஜிஆரின் சிலையை அமைக்க பீடம் கட்டப்பட்டு இன்னும் அதனை கட்டி முடிக்க முடியாமல் 25 ஆண்டுகளுக்கு மேலாக அரைகுறையாகவே உள்ளது. இதனை கட்டி முடிக்கும் பணியில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டுமாம், பதவிப்பறிப் போய்விடும் அல்லது வேறு ஏதேனும் சோக நிகழ்வுகள் நடைபெறும் என்ற சென்டிமென்ட் நிலவி வருகிறதாக கூறப்படுகிறது. 

பலர் கூறியும் செந்தில்பாலாஜி கேட்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என அந்த இடத்தில் கை வைத்ததே இப்படி அவரை அடித்து செய்துவிட்டது என திமுகவினரே கூறுகின்றனர்.