நாளை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாட்டப்படவுள்ள நிலையில் அதற்காக மக்கள் தயாராகி வருகின்றனர், விநாயகர் சிலைகள் படு ஜோராக விற்பனையாகி வருகின்றன, இந்த சூழலில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி தமிழக அரசு பல்வேறு கெடுபிடிக்களை விதித்து வருவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் காவல்துறை தொடர் அணிவகுப்பு நடத்தி வரும் சூழலில் ஏதோ மர்மமாக இருப்பதாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் குற்றாலநாதன் குறிப்பிட்டுள்ளார் இதுகுறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :-
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இந்துமுன்னணி சார்பில் மிகவும் சீரோடும் சிறப்போடும் அமைதியாக நடைபெற்று வருகிறது.எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு நெல்லை மாநகர் பாளையங்கோட்டை மற்றும் டவுன் பகுதிகளில் தனித்தனியாக போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
பொதுவாக தேர்தல் போன்ற சூழ்நிலைகளிலும் கலவரமான அசாதாரண சூழ்நிலைகளிலும் மட்டுமே போலீசாரின் அணிவகுப்பு நடத்தப்படும்
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு போலீஸ் அணிவகுப்பு நடத்த வேண்டிய காரணம் எதுவோ என பொதுமக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்!
மேலும் ஒரு சில மாவட்டங்களில் விநாயகர் கமிட்டி பொறுப்பாளர்கள் மீது சிஆர்பிசி 107 படி அழைப்பான அனுப்பப்பட்டு ஒரு வருடத்திற்கு எந்த பிரச்சினையும் செய்ய மாட்டோம் என கிரிமினல் குற்றவாளிகளிடம் வாங்குவது போல பிணையுறுதி பத்திரம் வழங்குமாறு காவல்துறையினர் சம்மன் வழங்கி வருகின்றனர்.
சில இடங்களில் விநாயகர் சதுர்த்தி வைப்பவர்களிடம் ஆதார் அட்டை கேட்டு காவல்துறையினர் நிர்பந்தப்படுத்தி வருகின்றனர், இவற்றையெல்லாம் பார்க்கும் போது இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியில் ஏதேனும் பிரச்சனை உருவாக்க போகிறார்களா? பிரச்சனை ஏற்படுவதை தடுக்க போகிறார்களா ? விநாயகர் கமிட்டி பொறுப்பாளர்களை மனரீதியாக மிரட்டுவதற்கு வேலைகள் முன்னெடுக்கப்படுகிறதா? என பல கேள்விகள் எழுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்த நடைமுறைகள் எல்லாம் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு புதிதாய் முளைத்து உள்ளது என்றாலும் , இந்து முன்னணி பேரியக்கம் நெருப்பில் பூத்த மலர் இந்துமுன்னணி தொண்டர்கள் எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்துதான் இயக்கத்தை வளர்த்தார்கள், வளர்த்து வருகிறார்கள். இது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்றாலும் ஏதோ மர்மாய் இருக்குது வினைகளின் நாயகன் விநாயகர் நம்மோடு இருக்க எதையும் சந்திப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.