தமிழக அரசியலில் நாளுக்கு நாள் திமுக பாஜக இடையேயான அரசியல் அதிகரிக்க தொடங்கி இருக்கும் சூழலில் தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வர இருப்பதும் அதற்கு முன்பே முதல்வர் ஸ்டாலின் கோவை செல்வதும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது, இது ஒருபுறம் என்றால் ஆளுநரின் அதிகாரத்தை குறைப்போம் என பேசிவந்த திமுகவிற்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி பதிலடி கொடுத்து இருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய இணை அமைச்சர் L.முருகன் பெயருக்கு அடுத்து எனது பெயரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் இடம்பெற்று இருப்பதாக புறக்கணித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மேலும் ஆளுநரின் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை குறைக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதை மிக பெரிய வெற்றியாக திமுக மற்றும் அதன் ஆதரவாளர்கள் கூறிவந்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆளுநர் , தமிழ்நாடு அரசின் கீழுள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில், பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவைக் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றி, ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியது தி.மு.க அரசு. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கா விட்டாலும், குறைந்தபட்சம் இந்த விஷயத்தில் அடக்கியாவது வாசிப்பார் ஆளுநர் என்பது ஆளும் திமுக அரசின் கணக்கு. ஆனால், ஆளுநர் எகிறியடித்திருக்கிறார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து, மீண்டும் அதிர வைத்து இருக்கிறார் ஆளுநர் ரவி.
இந்த நியமனங்கள் குறித்தும் வழக்கம்போல அரசுக்கு எந்தத் தகவலையும் ஆளுநர் மாளிகை தெரிவிக்க வில்லையாம். அடுத்ததாக, காலியாக இருக்கும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கும் புதிய துணைவேந்தரை நியமிக்கப்போகிறாராம் ஆளுநர்.
ஆட்டுக்கு தாடியும் நாட்டிற்கு ஆளுநரும் எதற்கு என கேட்டுவந்த திமுகவினருக்கு துணை வேந்தர் நியமனம் மூலம் உண்மையான பவர் என்ன என்பதை ஆளுநர் நிரூபித்து இருப்பதாக பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் என்றால் உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகின்ற 29ம் தேதி கோவை வருவதாக கூறப்படுகிறது .
புதிதாக தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களை அவர் திறக்க வருவதாக சொல்லப்படுகிறது. திருச்சி, விழுப்புரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக மாவட்ட அலுவலகங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதில் கோவை அலுவலகத்தை அவர் நேரில் திறக்க உள்ளதாகவும்
மீதம் உள்ள அலுவலகங்களை கோவையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க இருப்பதாகவும் அதன்பின் கோவையில் பல்வேறு பாஜக நிர்வாகிகளை அவர் சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளார் எனவும் கூறப்படுகிறது, அமிட்ஷா தமிழகம் வரும்போது அவர் முன்னிலையில் பிரபலங்கள் இருவர் பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில்தான் அமிட்ஷா வருகைக்கு முன்னரே கோவை செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கிறார் பல்வேறு அரசியல் கட்சிகள் குறிப்பாக அதிமுக பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகளை திமுகவில் இணைக்க வேண்டும் என சென்னையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவு சென்று இருக்கிறதாம் அவரும் அதனை நிறைவேற்றும் விதமாக களப்பணிகளை செய்து வருகிறாராம். மொத்தத்தில் திமுக vs பாஜக என்ற அரசியல் சதுரங்க ஆட்டம் தமிழக அரசியலில் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது.