
தேர்தல் நெருங்கி வருவதால் ’முதல்வன்’ திரைப்படத்தில் வருவது போல, ‘கோரிக்கைகளை வையுங்கள், உடனே தீர்வு காணப்படும்‘ என்ற புதிய விளம்பரத்தைக் கையில் எடுத்திருக்கிறது தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க அரசு! இந்த நாடகம் மக்களிடையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுக்கு ஆதரவாக ஊடகங்கள் மட்டும் இல்லை என்றால் திமுகவின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும்.விளம்பரம் செய்து திமுகவுக்கு ஜால்ரா அடிக்கும் நடிகர்கள் தொகுப்பாளர் தான் திமுக கொள்கை பரப்பு செயலாளராக உள்ளார்கள். தமிழகத்தில் நடக்கும் அட்டூழியங்களை பற்று வாய் திறக்காமல் அண்டை மாநிலங்கள் மொழி பிரச்னை நிதி என திசை திருப்பி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், இந்த ஆண்டு சட்ட மன்ற பேரவையில் பேசியபோது, ‘மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறியும் பணிகள் துவக்கப்படும்‘ என அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளிலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் நடை முறைக்கு வருவதாகவும், ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங் களிலும் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் தான் 2021 தேர்தல் வேளையில் புகார் பெட்டியை தூக்கி கொண்டு ஊர் ஊராக சென்றார் ஸ்டாலின்,100 நாளில் தீர்வு என கூறி ஆட்சிக்கு வந்து 4 வருடம் ஓடிவிட்டது அந்த புகார் பெட்டி தற்போது எங்கு உள்ளது என்பதே தெரியவில்லை. அதே போல் தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து என கூறி 50 லட்சம் கையெழுத்து வாங்கி ஜனாதிபதிக்கு அனுப்புவோம் என்றார் ஆனால் அதுவும் என்ன ஆனது தெரியவில்லை பல இடங்களில் குப்பையில் கிடந்தது. நாம் எது சொன்னாலும் தமிழக மக்கள் நம்பி விடுகிறார்கள் என்பதாழும் விளம்பர மோகத்தாலும் ஊடகங்களால் அதை அதை பெரிதுபடுத்தி நாயகனாக வளம் வரலாம் என நினைக்கும் முதல்வர் ஸ்டாலின் அடுத்த நாடகத்தை கையில் எடுத்துள்ளார், அதற்கு பெயர் தான் உங்களுடன் ஸ்டாலின்.
பொதுவாகவே அரசின் திட்டங்களும், செயல்முறைகளும் சரியாக இருந்தாலும், அவற்றை நடைமுறைப் படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு, உரிய பலன் மக்களுக்குக் கிடைக்காமல் பெயரளவில் நின்றுவிட்ட எத்தனையோ திட்டங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. சொல்லப் போனால், `30 நாள்களில் மனுக்களுக்குத் தீர்வு' என்று அரசாணையே போடப் பட்டுள்ளது. ஆனால், அது சரிவர அமல் படுத்தப்படவில்லை. சமீபத்தில் உயர் நீதி மன்றம்கூட, `அரசாணையின்படி 30 நாள் களில் மனுக்களுக்குத் தீர்வு காணாவிட்டால், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும்' எச்சரித் துள்ளது. அப்படியிருக்க, இதே உத்தரவுக்குப் புது ஸ்டிக்கர் ஒட்டி... `உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில் வீடு தேடி வருவதாகப் பரப்பப்படுகிறது.
சரி, என்ன ஸ்டிக்கர் வேண்டுமானாலும் ஓட்டிக்கொள்ளுங்கள். கடைசியில், பேரு வெச்சியே.... சோறு வெச்சியா?' என்று வழக்கம்போல வந்து இந்தத் திட்டமும் நின்றுவிடாமல் இருந்தால் சரி! இல்லை யென்றால், வீணாவது மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, வரிப்பணமும்தான்!வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் மக்கள் இந்தத் திட்டத்தின்கீழ் மனு கொடுப்பதற்காக, அந்த நாளில் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டுமா? அல்லது இருந்த ஊரிலிருந்தே சமர்ப்பிக்கலாமா? என்கிற கேள்விக்கு, `இப்போதைக்கு எங்களிடம் பதில் இல்லை' என்கிறார்கள் அதிகாரிகள் தரப்பில்.இதெற்கெல்லாம் சேர்த்து 2026 ல் மக்கள் பதிலடி தருவார்கள்.