சமீப காலமாக சாமானிய மக்களின் வங்கி கணக்கில் தவறுதலாக பணம் வரவு வைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மீண்டும் மீண்டும் அதே சம்பவமா என ஆச்சு வங்கியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருந்தகம் கடையில் பணிபுரிபவர் முகமது இத்ரிஸ் என்பவரது கோட்டக் மஹிந்திரா வங்கி கணக்கில் திடிரென்று ரூ.753 கோடி வரவு வைக்கப்பட்டதால் சர்ச்சையானது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த இத்ரிஸ் உடனடியாக என்ன செய்வது என்று அறியாமல் வங்கியை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். உடனே வங்கியும் முகமது இத்ரிஷின் வாங்கி கணக்கை முடக்கியுள்ளது. இது குறித்து முகமது இத்ரிஸ் கூறுகையில், "நான் காலையில் தான் இந்த எஸ்.எம்.ஷை பார்த்தேன். அதில் என்னுடைய கோட்டக் மஹிந்திரா வங்கி கணக்கில் ரூபாய்.753 கோடி டெபாசிட் ஆனதாக வந்த எஸ்.எம்.ஷை கண்டதும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் என்னுடைய வங்கியின் செயலில்
இதனை உறுதி படுத்தி பார்த்தேன். அதில் கோடி கணக்கில் பணம் இருந்தது உறுதியானது . நெற்றில் இருந்து இந்த பணம் என்னுடையே கணக்கில் இருந்துள்ளது. ஆனால் இதை நான் இன்று காலையில் தான் பார்த்தேன், இது குறித்து வங்கிக்கு தகவல் அளித்து கேட்டதற்கு வங்கி ஊழியர்கள் சரியான பதில் கூறவில்லை. மேலும் என்னுடையே வங்கி கணக்கை முடக்கப்படுவது நியாயம் அல்ல, வங்கி செய்யும் தவறுதலுக்கு என் கணக்கை முடக்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.
இதேபோல் முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை கோடம்பாக்கத்தில் கார் ஓட்டுநர் ராஜ்குமார் என்பவரின் வங்கி கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆகியிருந்தது.அதில் சில ஆயிரங்களை அவர் தனது நண்பருக்கு அனுப்பிய நிலையில், பிறகு வங்கி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரது கணக்கில் இருந்து பணம் திரும்பப் பெறப்பட்டது. இதுகுறித்து அவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் எதிரொலியாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் உயரதிகாரி ஒருவர் ராஜினாமா செய்தார்.
இதற்கிடையில் நேற்று தஞ்சாவூரில் கணேசன் என்பவரது கோட்டக் மஹிந்திரா வங்கி கணக்கில் ரூ.756 கோடி வரவு வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது வங்கிக் கணக்கு இருப்பில் ரூ. 756 கோடி இருப்பதாக மெசேஜ் வந்ததையடுத்து அந்த நபர் உடனே வங்கி கிளைக்கு சென்று தெரிவித்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதே கோட்டக் வங்கியில் சென்னையை சேர்த்தவர்க்கு வந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக முகமது இத்ரிஸ் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். எதற்காக சாமானிய மக்களுக்கு இது போல் பணம் வருகிறது, வங்கி ஊழியர்கள் செய்யும் தவறா அல்லது வேறு ஏதேனும் அமைப்பினரின் பணத்தை இப்படி சாமானிய மக்களுக்கு கொடுத்து கணக்கு காட்டப்படுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.