24 special

அமலாக்கத்துறை வச்ச குறி தப்பாது....பயத்தில் திமுகவினர்!

jakathrakshan
jakathrakshan

முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தற்போது அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் முதல் வருமான வரித்துறையினர் சோதனை தொடங்கினர். ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்கள், வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் ஹோட்டல்கள் , நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் சல்லடை போட்டு சோதனை நடத்தி வந்தனர். 


சொத்துக்குவிப்பு புகாரின்பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் சட்ட விரோத பண பரிமாற்றம் செய்த புகாரின்பேரில் ஏற்கனவே அமலாக்கத்துறை இவருக்கு சொந்தமான 88 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது.இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று சோதனையில் ஜெகத்ரட்சகன் அடையாறில் உள்ள வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் இருந்ததாக சுமார் 11கோடிக்கு மேல் சிக்கி இருப்பதாகவும் அதனை மெஷின் மூலம் எண்ணப்பட்டதாகவும் தகவல் வெளிவந்தது. அவரது அலுவலகம் மற்றும் வீடுகளில் ரகசிய அறை ஏதேனும் இருக்கிறதா என தீவிரமாக சோதனை நடத்திய நிலையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாகவும் தகவல் வந்தன. பூட்டி இருந்த வீட்டை வருமான வரித்துறையினர் உடைத்து சோதனை செய்வதால் மேலும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை தொடங்கிய நிலையில், தற்போது அமலாக்கத்துறையும் இந்த சோதனையில் இணைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனை மேலும் இரண்டு நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனிடையே ஜெகத்ரட்சகன் வீட்டில் இதுவரை சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை விசரணையை தொடங்கியுள்ளது. அமலாக்கத்துறைக்கு கைது செய்யுவும், வழக்கு பதிவு செய்யவும் அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டது தொடர்பாக, அமலாக்கத்துறை நேரடியாக களத்தில் இரங்கி விசாரணை செய்து செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அடுத்தபடியாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி இவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், மாலையில் இரண்டு பேரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்று இரவு முழுவதும் விசாரணை நடத்தினர். அப்போது இவர்களும் செந்தில் பாலாஜிக்கு அடுத்ததாக கைது செய்யப்பட்ட வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்தன. 

ஆனால் கைது செய்யப்படாமல் விடுவித்தனர். அதன் பின் வழக்கு பதிந்து மீண்டும் தேவைப்பட்டால் ஆஜராகும்படி அமலாக்கத்துறை அறிவித்தது. அந்த வகையில், தற்போது ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீட்டில் அமலாகாதுரை அதிகாரிகள் வந்துள்ளதால் ஜெகத்ரட்சகன் கைது செய்யப்படலாம் என்று தகவல் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் திமுவின் முக்கிய புள்ளிகள் பயத்தில் உள்ளனர். கடந்த காலத்தில் சோதனை நடத்தியது காங்கிரஸ் ஆட்சி அதனால் தப்பித்து விட்டீர்கள். இப்பொது மத்தியில் இருப்பது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறுவதால் இந்த டைம் மிஸ் ஆகாது என்று தகவல் வெளியாகி வருகிறது.