24 special

சற்றுமுன் தலைகீழாக மாறிய தமிழக அரசியல் களம் !

Palanivel thiyagarajan, annamalai
Palanivel thiyagarajan, annamalai

தமிழக அரசியலில் எது நடக்க கூடாது என திராவிட இயக்கங்களும், பெரியாரிய அமைப்புகளும் எதிர்பார்த்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டதோ அவை அனைத்தும் தற்போது சுக்கு நூறாக உடைந்துள்ளது.


தமிழக அரசியலில் அண்ணாமலை நிகழ்த்திய அதிரடி சம்பவங்கள்தான் ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் புரட்டி போட்டு இருக்கிறது குறிப்பாக தமிழகத்தில் ஒரு கட்சி வளருகிறது என்றால் அக்கட்சியின் தலைவர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினால் மட்டுமே சாத்தியமாக மாறி இருக்கிறது, காங்கிரஸ் கட்சியை எதிர்த்து திமுகவும், திமுகவை எதிர்த்து அதிமுகவும் அவ்வாறே தமிழகத்தில் வளர்ச்சியை பெற்றுள்ளது.

அந்த வகையில் தற்போது அண்ணாமலை நேரடி தமிழக கள அரசியலுக்கு வந்துள்ளது அவரது பேட்டியின் மூலம் தெரிவந்து இருக்கிறது, எங்களுடைய அரசியல் எப்போதும் அதிரடியாகத்தான் இருக்கும் என அண்ணாமலை தெரிவித்த ஒரு நாளைக்குள் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அண்ணாமலையிடம் வாங்கிய பதிலடி பலத்த அரசியல் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.

குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் துணை வேந்தர்கள் மாநாட்டில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வேண்டும் என அவரது கருத்தை தெரிவித்து இருந்தார், முதல்வரின் கருத்து விவாதத்திற்கு உள்ளாகும் பேசு பொருளாக மாறும் என எதிர்பார்த்து ஆளும் தரப்பு காத்து இருந்த சூழலில் நிதி அமைச்சருக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை பேச்சு பேசு பொருளாக மாறியது.

கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி மதுரை விமான நிலைய வாயிலில் தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது. இது குறித்த சர்ச்சை ஆடியோ தொடர்பாக விளக்கமளித்த அண்ணாமலை, திமுகவினர் ஆடியோவை எடிட் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், டிவிட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை முன்னோர்களின் பெயரைக் கொண்டு பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனும், அவரது கூட்டமும் வாழ்வதாகவும், ஆகையால், தானாக உருவாகியிருக்கும் ஒரு விவசாயியின் மகனை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார் அண்ணாமலை.

பெரிய பரம்பரையில், வெள்ளிக் கரண்டியுடன் பிறந்ததைத் தவிர, இந்த ஜென்மத்தில் வேறு எதையும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்யவில்லை என்றும், அவர் அரசியலுக்கும், மாநிலத்திற்கும் சாபக்கேடு என்றும் அண்ணாமலை சாடினார். இல்லாத ஒன்றை இட்டுக்கட்டும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், iyஎன்றும் காட்டமாக பதிலடி தெரிவித்தார் அத்துடன் தனது செருப்புக்கூட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிகரில்லை என்றும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இந்த சூழலில் அண்ணாமலையை ஆடு என்று கிண்டல் செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து ஆடு மாடுகளை குல தொழிலாக செய்பவர்கள் மத்தியிலும், அண்ணாமலை சார்ந்த சொந்த சமுதாய மக்கள் மத்தியிலும் அண்ணாமலைக்கு ஆதரவான மன நிலையையும், திமுகவிற்கு எதிரான மன நிலையையும் உண்டாக்கி இருக்கிறதாம்.

இந்த சூழலில்தான் ஆடு மாடு மேய்ப்பது குற்றமா? ஏன் ஆடு மாடுகளை மேய்ப்வர்கள் முன்னேற கூடாதா அண்ணாமலை படித்து தானே முன்னேறினார், யார் குடியை கெடுத்து முன்னேறினாரா என்று பலரும் விமர்சனத்தை முன் வைக்க தொடங்கியுள்ளனர்.

நிதி அமைச்சர் கிண்டலாக பதிவு செய்த கருத்து இப்போது அண்ணாமலைக்கு ஆதரவாக மாறியுள்ளது, நிதி அமைச்சர் மீது செருப்பை வீசி விட்டார்கள் என எழுந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் நிதி அமைச்சர் ஆடு என பதிவிட்ட ஒற்றை ட்விட் மூலம் அண்ணாமலைக்கு ஆதரவாகவும் திமுகவிற்கு எதிராகவும் களம் மாறி இருக்கிறது.

மொத்தத்தில் திமுக கையில் இருந்த அரசியல் பந்து அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கை மூலம் பாஜக கைக்கு சென்றுள்ளது. 

அடுத்த பதிவில் தமிழக  ஊடகங்களில் ஆபரேஷன் ஸ்டார்ட் செய்த பாஜக....! நிகழ்ந்த அதிரடி மாற்றம் என்ன என்பது குறித்து பார்க்கலாம் மறக்காமல் Tnnews24 digital பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.