24 special

போராட்டம் வாபஸ் இன்றே பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள்!

mk stalin
mk stalin

'சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினரும், பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தினரும், டெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும் கடந்த 10 நாட்களுக்கும் மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 50க்கும் மேற்பட்டோர் மயக்கம்  அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.. ஆசிரியர்களின் போராட்டத்தை கண்டு களத்திற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைளை வலியுறுத்தினார் . அவரை தொடர்ந்து சமூக ஆர்வலர் சவுக்கு சங்கர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். 


இவர்களை சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும், துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் ஈடுபட்டனர். ஆனால் எதற்கும் மசியாமல் போராட்டத்தை கைவிடமாட்டோம் என பிடிவாதம் பிடித்தனர். இதையடுத்து ஆசிரியர் சங்கத்தினருடன் நேற்று முன்தினம் அமைச்சர் அன்பில் மகேஷ்  பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2500 ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ். நிரந்தர பணி, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கை அமைச்சர் நிராகரிக்கப்படாதல் ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் தொடரும் என அறிவித்திருந்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலையில் ஆசிரியர்கள் அனைவரும் காவலர்களை கொண்டு கைது செய்யப்பட்டு சமூக நல கூடத்தில் தங்க வைங்கப்பட்டு, மாலையில் அணைத்து ஆசிரியர்களையும் விடுவித்தனர்.

இதில் பகுதிநிலை ஆசிரியர்கள் மற்றும் டெட் ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்நிலையில் இன்று காலை இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் பள்ளிகளுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர்.மேலும் எண்ணும் எழுத்தும் திட்டம் மற்றும் பள்ளி வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்திருந்தனர்.இந்நிலையில் இன்று இடைநிலை ஆசிரியர்களிடம் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி இன்று முதல் பணிக்கு திரும்ப இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இதில் 3 மாதத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக தமிழக முதல்-அமைச்சரும் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தனர் வரும் 9ம் தேதி பள்ளிக்கு தொடர்ச்சியாக செல்வதாகவும் கூறினர்.