24 special

போட்டு தாக்கிய மூத்த வழக்கறிஞர் "தமிழ்மணி" ஏன் இப்படி ஆடி போன நெறியாளர் தம்பி தமிழரசன்!

Tamilmani and Tamilarasan
Tamilmani and Tamilarasan

முதல்வர் 9 லட்ச ரூபாய் கால்வாயை ஆய்வு செய்ய நேற்று ஆன தொகை 50 லட்சம், முதல்வருக்கு கார்பரேசன் அலுவலகத்தில் ஆய்வு செய்ய என்ன அதிகாரம் இருக்கிறது எல்லாமே விளம்பரம் என மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி பேச அதற்கு நெறியாளர் தம்பி தமிழரசன் எதிர் கேள்வி கேட்க இறுதியில் தமிழ்மணி தெரிவித்த கருத்தால் ஆடிபோய்விட்டார் நெறியாளர்.


இது குறித்து நடந்தவற்றை செல்வநாயகம் தொகுத்து வழங்கியவை மூலம் பார்க்கலாம், "திருச்சி கார்ப்பரேஷனுக்கு இவர் போகவும், அங்கே ஆய்வு பண்ணவும் அதிகாரம் கிடையாது. இவரு பண்றது எல்லாமே ஒரு பப்ளிசிட்டிக்காகவும் பி.ஆர்.ஓவுக்கும் தான். இவர் ஒரு கன்ஸ்டிரக்டிவ் ஒர்க்கும் பண்ணலை, அதனால அரசாங்கம் ஸ்தம்பிச்சு போச்சு " - வழக்கறிஞர் தமிழ்மணி  

வழக்கறிஞர் தமிழ்மணி, "(சிந்தாதிரிப்பேட்டையில் கொல்லப்பட்ட பாஜக பாலச்சந்திரன் கொலை பற்றி) அவர் பல முறை, பல மாதங்களாக காவல்துறைக்கு புகாரளித்திருக்கிறார், 'இன்னின்னாரால் என் உயிருக்கு ஆபத்து' என்று. காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், அவர் குறிப்பிட்ட ஆட்களாலேயே அவர் கொலை செய்யப்படுகிறார் அவர். இது என்ன சட்ட ஒழுங்கு? முதலமைச்சர்  மூலவராக (ஓரிடத்தில்) இருப்பதை விட்டு உற்சவராக (ஊர்வலம் போக) ஏன் இருக்க ஆசைப்படுகிறார்? இவர் வேலை வாங்குவதை விட்டு களத்தில் இறங்குவதால், அத்தனை காவல்துறையும் இவர் பின்னால் போகின்றன. இப்படி இருந்தால் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும்? கெட்டுத்தான் போகும். அவர் விளம்பரம் தேடுவதை விட வேண்டும்" என்று கூற.

டென்ஷனான நெறியாளர் , "இதற்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்க...வழக்கறிஞர் தமிழ்மணி, "ஆறரை மணி நேரம் கமிஷனர், டெபுடி கமிஷனர், இன்ஸ்பெக்டர் முதல் கான்ஸ்டபிள் வரை ரோட்டில் (முதல்வர் பாதுகாப்புக்காக) நின்றால், அவன் எங்கே வேலை செய்வான்?".

நெறியாளர், "நிர்வாக நடவடிக்கைகள் சரியாக நடக்கிறதா என்று (முதல்வர்) பார்க்கிறார்". வழக்கறிஞர் தமிழ்மணி, "இல்லை. அதன் பெயர் ஆய்வு. 9 லட்சத்து 95 ஆயிரம் செலவில் வெட்டப்படும் கால்வாயை பார்க்கப்போறேன்னு போறார் முதல்வர். இதற்காக முழு அட்மினிஸ்டிரேஷனும் நேற்று காலை முதல் இன்று வரை இந்த வேலையை தான் செய்து கொண்டிருக்கிறது. இந்த ஆய்வுக்கு ஆகும் செலவு 50 லட்சம்! இவர்  என்ன செய்தார் அங்கே போய்? டேப் வச்சு அளந்தாரா?".

நெறியாளர் , "ஏன் இப்படி வார்த்தை பிரயோகம்? கேலி கிண்டல் வேண்டாம்" (டென்ஷன் )வழக்கறிஞர் தமிழ்மணி, "ஆய்வுன்னா அது தான் அர்த்தம் (டேப் வைத்து அளப்பது)." நெறியாளர் , "உங்களிடம் ஆரோக்கியமான கருத்தை எதிர்பார்த்தேன்".

வழக்கறிஞர் தமிழ்மணி, "அது உங்கள் கருத்து. உங்க கருத்தை கேட்டுப் போக வரலை நானிங்கே. என் கருத்தை சொல்லத்தான் வந்திருக்கிறேன். நெறியாளர், "பண்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தலாம்".வழக்கறிஞர் தமிழ்மணி, "அவர் டேப் வச்சு அளக்கிறாரா என்பது பண்பாடில்லாத வார்த்தையா? பண்பாடுன்னு சொன்னதை நீங்க வித்டிரா பண்ணுங்க முதல்ல" 

வழக்கறிஞர் தமிழ்மணி, "இவரு (முதல்வர் )கம்ப்ளீட்டா வெளில இருக்கறதால தான் (சுத்துறது?) காவல்துறை அதன் வேலையை பார்க்க முடியலை. இவருக்கு காவல் குடுக்கறதும், இவருக்கு போற இடத்துல எல்லாம். (மேலும்) திருச்சி கார்ப்பரேஷனுக்கு இவர் போகவும், அங்கே ஆய்வு பண்ணவும் அதிகாரம் கிடையாது. இவரு பண்றது எல்லாமே ஒரு பப்ளிசிட்டிக்காகவும் பி.ஆர்.ஓவுக்கும் தான். இவர் ஒரு கன்ஸ்டிரக்டிவ் ஒர்க்கும் பண்ணலை, அதனால அரசாங்கம் ஸ்தம்பிச்சு போச்சு " என அதிரடியாக கருத்து தெரிவித்தார் தமிழ் மணி. விவாதம் நடந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.