பதிவு : ப. இந்துவன்
சேகரிப்பு : TNNEWS24 குழு
என்னுடன் வேலை செய்யும் நண்பன் ஒருவன் தீவிரமாக மத்திய அரசை எதிர்ப்பவன். எப்பொழுதும் எதாவது ஒரு செய்தியை என்னிடம் காட்டி விமர்ச்சித்துக்கொண்டே இருப்பான். அவன் என்னிடம் காட்டும் ஒவ்வொரு செய்திகளுக்கும் எனது பதில், "இதற்கு ஆதாரம் என்ன?" இதை நீ எப்படி உண்மை என்ற முடிவுக்கு வருகிறாய்? இந்த கேள்வியோடு நிறுத்திக்கொள்வேனே தவிர தர்க்கம் செய்ததில்லை.
எனது இந்த இரு கேள்விகளால் நாட்கள் செல்லச் செல்ல அவனது விமர்சனங்கள் குறைந்து கொண்டே வந்தது...!சிறிது நாட்களுக்கு முன்பு அண்ணாமலை எனது கட்சியையோ கட்சிக்காரனையோ தொட்டால் திருப்பி அடிப்பேன் என்றும் அது எனது தர்மம் என்றும் கூறிய பேட்டியின்போதும், இன்றைய பெட்ரோல் டீசல் விலை குறைப்பு கண்டனப் பேரணியின்போதும் லைவ் எப்படி பார்ப்பது என்று என்னிடம் கேட்டு உயிரை வாங்கிவிட்டான்.
காரணம் என்னனா இந்திய அரசியலையும் தமிழக அரசியலையும் சமீப காலமாக கூர்ந்து கவனித்து வருகிறான் என்பதை அவ்வப்போது K.Annamalai பேட்டி, Maridhas M வீடியோ, B R Sreenivasan அவர்களின் விவாதங்கள் போன்றவற்றை அவன் பார்க்கும் காணொலியின் ஒலிகளை வைத்து புரிந்துகொண்டேன்...!
இன்று அவன் கூறுகிறான் "தமிழக அரசியலில் இத்தகு ஆற்றல் மிக்க தலைவரை நான் இதுவரை கண்டதில்லை" அவரின் தன்னம்பிக்கையும் தைரியமான பேச்சும், தான் பேசும் ஒரு விசயத்தில் உள்ள "விசய ஞானமும்" என்னை வியக்க வைக்கிறது என்கிறான். இன்று பெட்ரோல் டீசல் விலையை குறைக்கத்தான் பேரணி நடக்கிறது என்று நான் கூறியதும்.,
என்னை தடுத்து இன்றைய ஆளும் அரசு தேர்தல் வாக்குறுதியில் தந்த வாக்குறுதியை நிறைவேற்றத்தான் இந்த பேரணி நடக்கிறதே தவிர புதிதாக எதுவும் குறைக்கச் சொல்லி பேரணி நடக்கவில்லை என்று எனக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு தமிழக அரசியலை கூர்ந்து கவனிக்கிறான்.
ஊருக்கு சென்றதும் "அண்ணாமலை" பெயரில் ஒரு இளைஞரணி ஆரம்பிக்க வேண்டும் என்று அவன் கூறியதும் எனக்கே சற்று ஆச்சரியமாக இருந்தது. காரணம் அவன் வெறும் முகநூல் யூடியூபில் வரும் செய்திகளை வைத்து மத்தியை கடுமையாக விமர்ச்சனம் செய்தவன் குடும்ப பாரம்பரியமாக ஒரே கட்சியை சேர்ந்தவனிடமிருந்து இப்படி ஒரு பதிலை கேட்டதும் எனக்கும் சற்று வியப்பாகத்தான் இருந்தது...!
தமிழகம் மத்தியை நோக்கி இவ்வளவு கடன் பாக்கி இருக்கிறது என்று சுட்டிக்காட்டியதை எதிர்த்து மத்திக்கும் தமிழகம் தரவேண்டிய கடன்தொகையைப் பற்றி கூறிய அண்ணாமலையின் நியாயமான வாதத்தை அவ்வப்போது என்னிடம் கூறிக்கொண்டே இருக்கிறான். தமிழக வரலாற்றில் "வலிமையான தலைவன்" ஒருவன் உருவாகிறான் என்று கூறியவன் இறுதியாக பாரத பிரதமர் சென்னை வந்தபோது நிகழ்ச்சி நடந்த மேடை அண்ணாமலைக்கு மட்டும் கிடைத்திருந்தால்.,
காட்சி வேறாக இருந்திருக்கும் என்று கூறிக்கொண்டே இன்றைய பேரணி காணொளிகளை பார்க்கச் சென்றுவிட்டான். காலம் மாறுகிறது, காட்சியும் மாறுகிறது, நாம் எப்போது மாறுவோம்? என்ற சிந்தனையில் நான்...!- பா இந்துவன்.
இது போன்ற உங்களது கருத்துக்கள் அல்லது கட்டுரைகள் எங்களது இணையதளத்தில் வெளியாக தொடர்பு கொள்ளவும் [email protected] OR 9962862140 (WHATSAPP ONLY )