TNNEWS24 EXCLUSIVE கன்டென்ட் : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றுள்ள சூழலில் அதன் முக்கியத்துவம் குறித்து பார்க்கலாம், 2024 தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக பணியாற்றி வருகிறது, பாஜக மத்தியிலும் மாநிலத்திலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதால் அது ஆட்சிக்கு எதிரான வாக்குகளை உருவாக்கும் என்பதால் அதனை சமாளிக்க பாஜக வியூகம் வகுத்துள்ளது.
இதனை சமாளிக்க எந்தெந்த மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லையோ அங்கெல்லாம் அக்கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைமை ஓபன் கேட் கொடுத்துள்ளது, அதாவது 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலை மனதில் வைத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, தெலுங்கானாவில் அம்மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா என முக்கிய 5 மாநிலங்களை பாஜக தனது இலக்கில் வைத்துள்ளது, இதில் முக்கிய தலைவர்கள் மாநிலம் சார்ந்து நடவடிக்கையில் இறங்க முழு பிரீடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே தெலுங்கானாவில் அம்மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் பிராஜசங்கரமா யாத்திரையை தொடங்கியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் சார்ந்த அரசியலில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார் அதன் வெளிப்பாடுதான், நானும் திராவிடன் தான் திராவிடத்தை எதை வைத்து அளவுகோல் வைக்கிறீர்கள் என எப்போதும் பாஜக தமிழகத்தில் கூறாத கருத்தை பதிவிட்டார்.
இந்த சூழலில் தமிழகமும் இலங்கையும் பிரிக்க முடியாத அரசியலை கொண்டவை, ஈழ தமிழர் விவகாரங்கள் தொடங்கி பல்வேறு விவகாரங்களில் இந்தியாவின் மாநிலமான தமிழகத்திற்கும் இலங்கைக்கும் பெரிய கலாசார தொடர்பு உண்டு, பல அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் இதன் அடிப்படையில் அரங்கேறி இருக்கின்றன.
இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் இலங்கையை சேர்ந்த தமிழ் எம்.பி சுமந்திரன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சென்னையில் சந்தித்து பேசினார், அப்போது இலங்கை தமிழர்களுக்கு பிரதமர் மோடி அரசு செய்யும் உதவிகள் பற்றியும், இந்தியா தரப்பில் உதவிகள் செய்யப்பட்டாலும் அதனை இலங்கை அரசு எவ்வாறு முட்டுக்கட்டை போடுகிறது என்பதை பற்றியும் அண்ணாமலையிடம் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அண்ணாமலையை இலங்கை வருமாறும் அழைத்தார், இந்த சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுவை செல்வதற்காக சென்னை வந்திருந்த உள்துறை அமைச்சரிடம் அண்ணாமலை இந்த தகவலை தெரிவித்து, பல்வேறு அரசியல் கருத்துக்களையும் பகிர்ந்து இருக்கிறார், அதன் அடிப்படையில் அண்ணாமலை இலங்கை செல்ல அமிட்ஷா பச்சை கொடி காட்டி இருக்கிறார்.
அண்ணாமலை இலங்கையில் உள்ள தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து பேசி இந்தியாவில் மோடி அரசாங்கம் செய்யும் முன்னெடுப்புகளை விவரமாக எடுத்து கூற இருக்கிறாராம் அதோடு நிற்காமல், இலங்கையை சேர்ந்த 100 முக்கிய தமிழ் தலைவர்களை விரைவில் தமிழகம் அழைத்து வந்து, இலங்கை மக்களுக்கு திமுக காங்கிரஸ் கூட்டணி அரசில் என்ன நடந்தது தற்போது என்ன நடக்கிறது என மிக பெரிய பிரமாண்ட நடைபயண பேரணியை மாநிலம் முழுவதும் நடத்த இருக்கிறாராம்.
இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுவதால் மாநிலத்தில் ஆளும் அரசு இப்போதே அண்ணாமலையின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளதாம்.