
தமிழ்கத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து சர்வே எடுக்கப்பட்டதில் திமுக ஆட்சியே கவிழும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் கையில் கத்தி, அரிவாளுடன் வீதிகளில் ரெளடிகள் சுற்றித்திரிவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. போதையின் உச்சத்தில் அப்பாவிப் பொதுமக்களைக் கண்டபடித் தாக்குகிறார்கள்; இரக்கமே இல்லாமல் குழந்தைகளைத் தாக்குகிறார்கள். காவலர்களையே பிளேடால் அறுத்து, கத்தியால் குத்திக் கிழிக்கிறார்கள். வீதிக்கு வீதி கட்டற்ற ரெளடியிசம் தலைவிரித்தாடுகிறது. ‘கையாலாகாத காவல்துறையால் பொதுமக்களைப் பாதுகாக்க முடியவில்லை...’ என்று எதிர்க்கட்சிகளெல்லாம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன. இவை எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாமல், ‘ஆட்சிப் பெருமை’ பேசுவதிலேயே ஆர்வமாக இருக்கிறார் முதல்வர்..
சமீபகாலமாகத் தமிழகத்தில் நடக்கும் வன்முறை மற்றும் குற்றச் சம்பவங்கள், ‘சட்டத்தின் ஆட்சிதான் இங்கு நடக்கிறதா?’ என்கிற சந்தேகத்தையே எழுப்பியிருக்கின்றன. கடந்த நவ. 7-ம் தேதி, தனியார் பள்ளிப் பேருந்தைத் தடுத்து நிறுத்தி, மது போதையிலிருந்த இளைஞர்கள் சிலர் கற்களைக்கொண்டு தாக்கினார்கள். பேருந்தின் உள்ளே இருந்த பிஞ்சுக் குழந்தைகள் பயத்தில் அலறித் துடிக்க, அதைத் துளியும் கண்டுகொள்ளவில்லை அந்த போதை ஆசாமிகள். ‘பொதுமக்கள் நிறைந்த பட்டப்பகலில், அதுவும் குழந்தைகள் இருக்கும் பள்ளிப் பேருந்தைத் தாக்கும் அளவுக்குத் துணிச்சல் அவர்களுக்கு எப்படி வந்தது..?’, ‘அவர்களில் யாருக்காவது கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கம் இருந்ததா..?’ என்பதையெல்லாம் காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை. மூன்று பேரைக் கைதுசெய்ததோடு, அந்த விவகாரத்தைக் கணக்கெழுதி முடித்துவிட்டது காவல்துறை.
கடந்த வாரம், விழுப்புரத்துக்கு அருகிலுள்ள வீடூர் அணை நிரம்பியதைப் பார்ப்பதற்கு, பொதுமக்கள் கூட்டமாகக் கூடியிருக்கிறார்கள். அங்கு வந்த ரௌடிகள் சிலர், பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணத்தையும் செல்போன்களையும் பறித்திருக்கிறார்கள். பணம் தர மறுத்தவர்களை பாட்டில், கத்தியால் தாக்கியிருக்கிறார்கள். பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடவும், அதில் தடுக்கி விழுந்து, மிதிபட்டவர்கள் ஏராளம்.
கொளத்தூர் பகுதிக்கு ஆகாஷ் என்பவரைத் தேடி ரெளடிகள் சிலர் வந்திருக்கின்றனர். அவர்களிடம், ‘நீங்கள் யார்..?’ என்று கேள்வி எழுப்பிய சந்திரா என்பவரையும், அவரின் மகனையும் சகட்டுமேனிக்கு வெட்டியிருக்கிறார்கள். அங்கிருந்து தப்பித்துச் செல்லும் வழியில், கார்த்திக், தமிழ்ச்செல்வன், மனோஜ், விஷால் என்று ஓரமாக நின்றுகொண்டிருந்த பொதுமக்களில் பலரையும் வெட்டியிருக்கிறது அந்தக் கும்பல்.
பொதுமக்களுக்கு மட்டுமல்ல, காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல்தான் சமீபகாலமாக நிலவுகிறது. விழுப்புரம் மாவட்டம், காணைப் பகுதியில் பள்ளி மாணவிகளைக் கேலி செய்த இளைஞர்களை விசாரிப்பதற்கு, காவலர் ராஜேந்திரன் மஃப்டியில் சென்றிருக்கிறார். ‘நீ எதுக்கு இதெல்லாம் கேட்கிற...’ என்று காவலர் ராஜேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள், அவரைத் தள்ளிவிட்டுச் சட்டையைக் கிழித்திருக்கிறார்கள். அதேபோல, சென்னை புளியந்தோப்பு பகுதியில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை ரோந்து போலீஸார் மடக்கிப் பிடித்தபோது, காவலர்களை எட்டி உதைத்து, பாட்டிலால் தாக்கியிருக்கின்றனர். சென்னை பர்மா பஜாரில், திருடப்பட்ட செல்போனை மீட்க ஆர்.பி.எஃப் காவலர் சென்றபோது, அங்கிருந்த பலரும் சேர்ந்து அவரைத் தாக்கிய சம்பவம் நடந்திருக்கிறது. மணல் கடத்தல் தொடர்புடைய ஒருவரைக் கைதுசெய்வதற்கு, விழுப்புரம் காவல் நிலைய எஸ்.ஐ சென்றபோது, குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பமே சேர்ந்து அந்த எஸ்.ஐ-மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. போலீஸ் மீதிருக்கும் அச்சமும் மரியாதையும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போவது வருத்தமளிக்கிறது.
தமிழகத்தில், கத்தியைக் காட்டி மிரட்டி நடக்கும் வழிப்பறி, திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கையும் மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகின்றனஇந்த அளவுக்குச் சட்டம்-ஒழுங்கு மோசமானதற்கு, 24 மணி நேரமும் கிடைக்கும் மதுபானங்களும், கஞ்சா போன்ற போதை வஸ்துக்களும் ஒரு முக்கியமான காரணம். , என சர்வே ரிபோட்டுக்கள் கூறுகிறது. காவல்துறையை அதிரடியாக இறக்கவேண்டியது இப்போது மிக மிக அவசியம். ஆட்சி முடிவதற்குள், ஒரு முறையாவது தனது இரும்புக்கரத்தை வெளிக்காட்டிப் பயன்படுத்துவாரா காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வர்?
