தமிழக அரசியிலில் தினந்தோறும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. கூட்டணியில் இருந்த கட்சிகள் மற்ற கட்சிகளுக்கு தாவி வருகின்ற நிலை ஏற்படுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி டெல்லிக்கு சென்று வந்த நிலையில் பரபரப்பான சூழல் தொடர்ந்தது. கூட்டணி கட்சியான பாஜகவுடன் பனிப்போர் தொடங்கி நேற்று முன் தினம் நிறைவுக்கு வந்தது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டி பாஜகவுடன் கூட்டணி எப்போதும் இல்லை என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று அதிமுக தலைமை பம்மிய நிலையில் பொதுவெளியில் பாஜகவினரை விமர்சிக்க கூடாது என அறிக்கை வெளியிட்டார். அதன் பின் மதுரை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இரு தரப்பினரும் போஸ்டர் (சுவர் ஓட்டி) கருத்துக்களை தொடங்கினர். அந்த போஸ்டர்கள் அனைத்தும் சமூக வலைத்தளத்தில் வைரலாக இரு தரப்பினரிடமும் பனிப்போர் முடிந்துபோஸ்டர் யுத்தம் தொடங்கியதாக கருத்துக்களை முன் வைத்தனர். தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று பொது வெளியில் பேசி வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது செய்தியாளர்கள் அவரிடம் அடுத்த கட்ட நடவடிக்கை என என்று கேட்டதற்கு: பாஜக குறித்தோ, அண்ணாமலை குறித்தோ எந்த கருத்தையும் நான் தெரிவிக்க விரும்பவில்லை என கடந்து சென்று விட்டார். இதனால் அமலாக்கத்துறைக்கு பயந்து ஏதும் வாயை திறக்காமல் இருக்கின்றனர் என ஒரு பக்கம் பேச்சு தொடங்கிவிட்டது.
முன்னதாக, கூட்டணி முறிவு தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "தேசிய தலைமை தான் கருத்து கூறும். தேசிய தலைமை அறிவிக்கும் வரை, நாங்கள் எந்தவித கருத்தையும் கூற முடியாது. இதுகுறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்தல் தருவார்கள். அப்போது எங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறோம். என மௌனம் காத்து வந்திருந்தனர். அவர்களை தொடர்ந்து டெல்லி தலைமையும் மௌனம் காத்து வந்த நிலையில் கூட்டணி முறிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து புதிய அசைன்மென்ட் வேலையை கொடுத்துள்ளனர்.
அதாவது, ஊழல் வழக்குகளில் சிக்கிய அமைச்சர்கள் அனைவரையும் பாஜகவில் இணைக்கும் பணியயை கொடுத்துள்ளார்களாம். ஏற்கனவே திமுகவில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்குகளில் சிக்கி சிறை வசம் உள்ளார். அவரை தொடர்ந்து பொன்முடியும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. இவர்களை போல் அதிமுக அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகளில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல அமைச்சர்களின் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே இவர்கள் அனைவரும் பாஜகவில் கூடிய விரைவில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, அமலாக்கத்துறையின் அடுத்த ரெயிடு பணத்தின் பெயரை அடைமொழியாக கொண்டவர்தான் (தங்கமணி, வேலுமணி) முதல் ஆள். அவரை தொடர்ந்து அந்த பட்டியலில் எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கையாக இருக்கும் 3 பேரை பாஜகவில் இணைக்க பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும் தகவல் கசிந்துள்ளது. 2024ம் ஆண்டு தேர்தலுக்கு முன் அனைத்து கட்சி நிர்வாகிகளின் சொத்துக்களை அண்ணாமலை வெளியிடுவேன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.