Cinema

திமுகவின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே காரணம்..? லியோ இசை வெளியிட்டு விழா ரத்து!

udhayanithi, vijay
udhayanithi, vijay

லியோ இசை வெளியிட்டு விழா இம்மாதம் 30ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெறவுள்ள நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு, திடீரென ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா கிடையாது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி, இதற்கு அவர்கள்தான் காரணம் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’ இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. 


முன்னதாக படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்தது இசை வெளியிட்டு விழா சென்னையை தாண்டி ருச்சி, மதுரை, கோவை போன்ற இடங்களில் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடத்தலாம் என திட்டம் போட்டு இருப்பதாக அதிகாரத்தகவல் வெளியாகின. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உட்சத்திற்கு சென்றிந்தனர்.ரஜினிகாந்த ஜெயிலர் பட இசைவெளியீட்டு விழாவில் சொன்ன குட்டி கதை விஜய்க்கு எதிரானது என கருதினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லியோ இசை வெளியிட்டு விழாவில் பேசுவார் என அமைதி காத்த ரசிகர்களுக்கு லியோ படக்குழு நேற்று சோக செய்தியை தெரிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் தயாரிப்பு நிறுவனம் ஆடியோ வெளியிட்டு விழாவிற்கு நிறைய டிக்கெட் தேவைப்படும் என்ற கோரிக்கை எழுந்தது, இதுமட்டுமில்லாமல் பாதுகாப்பு நலன் கருதியும் ஆடியோ வெளியிட்டு விழாவினை ரத்து செய்து விட்டோம் என பதிவிட்டுள்ளனர்.

மேலும் நீங்கள் பலரும் நினைப்பது போல இது அரசியல் அழுத்தங்கள் காரணமாகவோ அல்லது வேறு காரணத்திற்காகவே நாங்கள் ரத்து செய்யவில்லை' எனத் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் ரசிகர்கள் திமுகவின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிட உரிமம் கேட்டதற்கு படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் மற்றும் படக்குழுவினர் மறுப்பு தெரிவித்து விட்டதாம். இந்த நெருக்கடி காரணமாகவே ஆடியோ வெளியிட்டு விழாவை படக்குழு நிறுத்தி வைத்ததாகவும், தளபதி விஜய் அரசியலில் வரவுள்ளதால் தான் இப்படி ஆளும் கட்சி திமுக நெருக்கடி தருவதாக சமூக தளத்தில் ரசிகர்கள் ஆதங்கமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.