
விஞ்ஞான ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் நம் நாடு அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்திய நாட்டின் வளர்ச்சி வீட்டில் உள்ள அனைத்து பெண்களின் வளர்ச்சியில் உள்ளது என்பதை அவ்வப்போது எடுத்துக்கூறி பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை உறுதியாக நம்பி அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி கிராமத்தில் வசிக்கும் பெண்களிலிருந்து நகரத்தில் வசிக்கும் பெண்கள் என அனைவருக்கும் வேண்டிய அத்தியாவசிய வசதிகளை நலத்திட்டங்களாக கொடுத்த வருகிறார். இதில் சில மாநிலங்களில் மாநில அரசின் ஆதிக்கமானது உயர்ந்திருப்பதால் மத்திய அரசின் திட்டங்களை முழு வீச்சில் அங்கு அமல்படுத்த முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.
அதே சமயத்தில் அப்படி சில மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாகவும் கொலை நடுங்க வைக்கும் சம்பவங்களும் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்தில் பல இளம் பெண்கள் தவறாக வழிநடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அதிலும் குறிப்பாக பயங்கரவாதிகளின் கைகளுக்குள் சிக்கி பயங்கரவாத சம்பவங்களுக்கு அவர்களை துணை போக வைக்கும் அதிர்ச்சிகர சம்பவம் தொடர்பான பல வதந்திகளும் கதைகளும் எழுந்து வந்தது. காலப்போக்கில் இந்த விவகாரம் வெறும் கதை அல்ல உண்மை சம்பவம் என்பதை இதில் பாதிக்கப்பட்ட பல பெண்களின் தோழிகளும் இதில் தங்களை எதிர்பாராத விதமாக இழந்து பிறகு சுதாரித்துக் கொண்டு பயங்கரவாதிகளின் வலையில் சிக்காமல் தப்பி வந்த பெண்களும் கூறியுள்ளனர்.
அதனால் இது போன்ற பயங்கரவாதிகளின் வலைக்குள் இளம் பெண்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக கேரளா மட்டும் இன்றி ஒட்டுமொத்த நாட்டில் உள்ள பெண்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு வெளியான கேரளா ஸ்டோரி படம் வெளியானது. ஆனால் இந்த படத்திற்கு கேரளாவிலேயே கடுமையான எதிர்ப்பு நிலவியது மேலும் பல மாநிலங்களிலும் இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது ஆனால் இந்த சம்பவத்தை தெரிந்து மற்றும் இந்த சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தில் தன் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் என பல த கேரளா ஸ்டோரி படம் வெறும் கதையல்ல உண்மைச் சம்பவம் என்பதையும் எடுத்துரைத்து சமூக வலைதளம் முழுவதும் வைரல் ஆக்கினர். இதனை அடுத்து சில இடங்களில் இந்த படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இந்த நிலையில் கிரிஷ் பரத்வாஜ் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேரளாவில் காணாமல் போன சிறுமிகள் மற்றும் பெண்கள் தொடர்பான கேள்விகளை கேட்டுள்ளார்.
அதற்கு மாநில குற்றப்பிரிவு தகவல் சேகரிப்பு பிரிவின் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதாவது 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் வரை காணாமல் போன பெண்கள் தொடர்பாக 5338 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தனது சமூக வலைதள பக்கத்தில், கடந்த 4 ஆண்டுகளில் கேரளாவில் 5338 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர், இது தி கேரள ஸ்டோரி படத்தில் உள்ள கவலையளிக்கும் கதையை எதிரொலிக்கிறது. ஆயினும்கூட, இந்த ஆபத்தான புள்ளிவிவரங்களைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, திரு. பிரனாய் விஜயன் அவற்றை வெறும் பாஜகவின் இந்திய பிரச்சாரம் என்று ஒதுக்கித் தள்ளுகிறார்! அரசியல் நிகழ்ச்சி நிரல்களைக் காட்டிலும் நம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது.காணாமல் போகும் ஒவ்வொரு பெண்ணும் வேதனையில் இருக்கும் ஒரு குடும்பத்தையும், துயரத்தில் இருக்கும் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். நம்முடைய பெண்களை பாதுகாப்போம், அனைவருக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வோம் என்று பதிவிட்டுள்ளார். இது கேரளா முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது.