
தமிழன் பெருமையை உலகிற்கே எடுத்துச்சொன்னவர்கள் நம் முன்னோர்கள். இதில் முக்கிய இடத்தை பிடிதவர்கள் சோழர்கள் ஆவர். ஆன்மீகத்தையும் தமிழையும் ஒன்றிணைத்து உலகம் தோறும் தமிழின் பெருமை பேச செய்தவர்கள். முதலாம் இராஜராஜசோழன் ஆட்சியில் கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள மிகப்பெரிய கங்கைகொண்டசோழீச்சரர் கோவில் , அரியலூர் பகுதியில் மிகச்சிறந்த ஒன்றாகும். கி.பி 1023 இல்கங்கை சமவெளியை வெற்றி கொண்ட பின்னர் முதலாம் இராஜேந்திர சோழனால், கங்கைகொண்டசோழபுரம் எனும் நகரமும் கங்கைகொண்டசோழீச்சரம் எனும் சிவன் கோவிலும் சோழ கங்கம் எனும் ஏரியும் வெற்றியின் நினைவாக அமைக்கப்பட்டது
இம்மூன்றும், கங்கை நதிகரையில் சோழர்களின் புலிக்கொடியை ஏற்றிய தமிழர்களுடைய வீரத்தின் நினைவுச்சின்னங்களாக இன்றும் விளங்குகின்றன. அவன் தனது தலைநகரத்தை தஞ்சாவூரிலிருந்து புதிதாகக் கட்டப்பட்ட இங்கு மாற்றினான். அவனது காலத்திலிருந்து, கி.பி 1279 இல் ஆட்சி செய்த சோழர் வம்சத்தின் இறுதி வரை, சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக 256 ஆண்டுகள் இருந்தது. அவர் இங்கு கட்டப்பட்ட பிரம்மாண்டமான கற்கோவில், இடைக்கால சோழர் காலத்திய அழகான சிற்பங்கள் நிறைந்த களஞ்சியமாகும். இந்த நகரம் ஒட்டக்கூத்தரின் மூவர் உலா, ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஆகிய இலக்கியங்களில் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது
இராஜேந்திர சோழனின் கங்கை பயணம் அவனது ஆட்சியின் 11 வது ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏசாலம் செப்புத்தகடுகள் மூலம் கி.பி 1036 இல் முதலாம் இராஜேந்திர சோழனால் கங்கைகொண்டசோழீச்சரம் கோவில் கட்டப்பட்டதாக உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகிறது. முதலாம் இராஜேந்திர சோழன் அவனது ஆட்சியின் 24 ஆம் ஆண்டில் இந்த கோவிலுக்கு கிராமங்களைத் தானமாகக் கொடுத்த விபரம், கி.பி 1068 இல் ஆட்சி செய்த வீரராஜேந்திர சோழனின் குறிப்புகளில் இருந்து கிடைக்கப்பெறுகிறது.
இன்றளவும் வாழும் வரலாறாக உள்ள இக்கற்கோவில், முதலாம் இராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைகளின் அழகிய தொகுப்பாக உள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் வங்காளம் ஆகிய இடங்களிலிருந்து எடுத்து வந்த பல சிற்பங்கள், போர் நினைவுப் பரிசாக இக்கோவிலிலும், அருகிலுள்ள கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
சந்தேஷ்வர அனுக்கிரக மூர்த்தி மற்றும் சரஸ்வதி ஆகியவை இக்கோவிலுள்ள அழகிய சிற்பங்கள் ஆகும். தற்போது இக்கோவில் இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. சமீபத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவுச்சின்னங்களுள் ஒன்றாக இதனை அறிவித்துள்ளது
பிரதமர் மோடி கங்கை கொண்டசோழ புரத்தில் கால் வைப்பதால் இனி உலக அளவில் கங்கை கொண்ட சோழீ ஸ்வரர் கோயில் புதிய வரலாற்றை படைத்து அதனை நோக்கி மக்கள் தேடி செல்வார்கள் கண்ணுக்கு தெரிய விண்ணை முட்டி நிற்கும் தமிழர்களின் அடையாளத்தை மறைக்க சில தற்குறி கூட்டம் மண்ணை தோண்டிக் கொண்டு இருக்கிறது. ஆனால் நம்முடைய பிரதமர் தமிழர்களின் அடையாளத்தையும் வீரத்தையும் உலகம் அறியும் வகையில் தமிழகம் வந்து கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயிலுக்கு சென்று நம்மை பெருமைபடுத்துகிறார். இது பிரதமர் மோடியின் இந்த பயணம் தமிழனின் வரலாற்றை ரி கிரியேட் செய்துள்ளார்.