
காமராஜர் குறித்து திமுக எம்.பி திருச்சி சிவா பேசிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் கைகளை தூக்கியுள்ளது திமுகவுக்கு சிக்கலை ஏறப்டுத்தியுள்ளது.
தி.மு.க ஆட்சி’, ‘அ.தி.மு.க ஆட்சி’ என்று மாறி மாறி ‘ஒரு கட்சி ஆட்சி’ என்ற காட்சியை அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தமிழகம் கண்டுவருகிறது. இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும்போது, ‘கூட்டணி ஆட்சி’ என்ற குரல் பல முனைகளிலிருந்தும் கிளம்புகிறது. கூட்டணியில் பங்கு என்ற குரலை வி.சி.க-வோ, பா.ம.க-வோ, த.வெ.க-வோ, தே.மு.தி.க-வோ எழுப்புகிறது என்றால், தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் அதை எப்படியாவது சமாளித்துவிடும். ஆனால், அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்திருக்கும் பா.ஜ.க-விடமிருந்தும், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸிடமிருந்து கூட்டணி ஆட்சிக்கான குரல் வருகிறது. அதுதான் பிரச்னை
இந்த நிலையில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அமைந்ததிலிருந்து, ‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால், தனித்தே ஆட்சியமைப்போம் என்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தற்போது, காங்கிரஸ் கட்சியிலிருந்தும் அதே குரல் எழுகிறது. ‘2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். அதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் அமைச்சர்களாக இருப்பார்கள்’ என்று சொல்லி, தி.மு.க-வுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான திருச்சி வேலுச்சாமி
திருச்சி வேலுச்சாமி திமுகவை வெளுத்துவங்கிவிட்டார் இதனால் திமுகவினர் தற்போது கப்சிப் ஆகியுள்ளார்கள். காங்கிரசுக்கு பயந்து திமுக பின்வாங்கியது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி நம்முடன் இருந்து கொண்டே துரோகம் செய்த காங்கிரசுடன் இனி கூட்டணி கிடையாது" திட்டவட்டமாக அறிவித்தார்.அதுமட்டுமில்லாமல் பூஜ்ஜியங்களை போட்டு ஊழல் குற்றச்சாட்டில் தி.மு.க.வை சிக்க வைத்து விட்டார்கள். கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் சிறைக்கு போனார்கள். நீங்கள் இருக்கும் போது நான் ஏன் பயப்பட வேண்டும். தனித்து நின்று தேர்தலை சந்திக்கும் தைரியம் நமக்கு உண்டு என வீரவசனம் பேசிவிட்டு காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார் கருணாநிதி.
தற்போது அதே நிலைமை தான் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் திருச்சி வேலுசாமி கூறுகையில் திமுக தனித்துப் போட்டியிடுவோம்’ என்று அவர்கள் சொல்லட்டும். ‘அதை விடுத்தது கூட்டணி கட்சிகள் இணைந்து பதவியில் உட்கார வையுங்கள்... நாங்கள் மட்டும் அதிகாரத்தை ருசிப்போம்’ என்று சொல்வது எந்த ஊர் நியாயம்? நாங்களும் தனியாக நிற்கிறோம் உங்களால் முடியுமா? என கேள்விகளை முன்வைத்துள்ளார்.
அப்படிப் பார்த்தால், மத்தியில் கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றது எப்படி? மொத்தம் 543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 14 எம்.பிக்களை வைத்திருந்த தி.மு.க., ஏழு அமைச்சர்களைப் பெற்றார்களே... அது நியாயம் என்றால், தமிழகத்தில் 234 எம்.எல்.ஏ-க்களில், 17 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பாருங்கள்.
இது நியாயமான குரல்தானே... அதனால்தான் எங்களுடைய உரிமைக்குரலை எழுப்புகிறோம். இதை ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் (தி.மு.க) விருப்பம். ஏற்றுக்கொண்டால் ஆட்சியில் இருப்பார்கள். ஏற்கவில்லை என்றால், அவர்கள் (தி.மு.க) எதிர்க்கட்சி வரிசைக்குப் போகத் தயாராக வேண்டியதுதான்!"
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் திருச்சி சிவாவை கண்டிக்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.