24 special

நீதிமன்றங்கள் கொடுத்த முத்தான தீர்ப்புகள்.. ஆடி போயிருக்கும் மாநில கட்சிகள்..!

Stallin and Mamta Banerjee
Stallin and Mamta Banerjee

முன்பெல்லாம் நீதி மன்றத்திற்கு வழக்கு என்று சென்றால் அதில் தீர்ப்பு கிடைப்பதற்கு குறைந்தது பல ஆண்டுகள் வரை செல்லும் அதிலும் மாநில அரசுகள் சம்மந்தப்பட்ட வழக்கு என்றால் சொல்லவே தேவையில்லை. ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைக்கீழாக மாறி வருகிறது நீதிமன்றங்கள் உடனடியாக தீர்ப்பு வழங்கி வருகின்றன.


அந்த வகையில் சமீபத்தில் கொடுப்பட்ட 6 தீர்ப்புகள் பல மாற்றத்தை உண்டாக்கியுள்ளது அவை என்ன என்று பார்க்கலாம்.

1, ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பின் மேல் முறையீட்டு மனுவை அவசரமாக எடுத்துக் கொண்டு விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. (உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு சரி என்பதே அதன் அர்த்தம்).

2,  மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் இரு தினங்களுக்கு முன் 10 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை போதாது என : "வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்ல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு". 

3, மஹாராஷ்டிரா முன்னாள் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மஹாராஷ்டிர அரசு பதிவு செய்த வழக்குகள் அத்தனையும் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இனி பரம்பீர் சிங் மீது மஹாராஷ்டிர போலீஸ்  எந்த வழக்கு பதிந்தாலும் அதுவும் சிபிஐக்கே செல்லும்

4, மஹாராஷ்டிரா பரம்பீர் சிங் குற்றம் சுமத்திய முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் பல வழக்குகளில் பெயில் கிடைக்காமல் தொடர்ந்து சிறையில் இருக்கிறார் இவரால் ஆளும் கட்சி அமைச்சர் என்ற அதிகாரத்தை எங்கும் பயன்படுத்த முடியவில்லை.

5, மஹாராஷ்டிரா தாவூது இப்ராஹிம் - பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் பெயில் மறுப்பு. தொடர்ந்து சிறையில் இருக்கிறார் 

6, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, "அமலாக்க பிரிவு எங்களை விசாரிக்க முடியாது" என்று போட்ட வழக்குகள் அத்தனையையும் பல மாதங்களாக விசாரித்து, முடிவில், "அமலாக்க பிரிவுக்கு உரிமை உண்டு. ஆஜராகுங்கள் அல்லது கைதாகுங்கள் " என்று தீர்ப்பானதும், நேரில் ஆஜர் ஆதாரங்கள் நிறைய இருப்பதால் விரைவில் கைதாகலாம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்திலும் லாவண்யா வழக்கை சிபிஐக்கு மாற்றியது தவறு என உச்ச நீதிமன்றம் சென்ற தமிழக அரசிற்கு கொட்டு வைத்து அனுப்பியது உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை செய்ய தடையில்லை எனவும் தெரிவித்தது. குறிப்பிடத்தக்கது, இப்படி விரைவாக நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்க முக்கிய காரணமாக பார்க்க படுவது விசாரணை அமைப்புகள் தாக்கல் செய்த ஆவணங்கள் என்று கூறப்படுகிறது.

இதே போல் விரைவில் ஏர்செல் மேக்சீஸ் வழக்கு BSNL வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் இந்த ஆண்டின் இறுதிக்குள் தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுவதால் பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

SOURCE - செல்வநாயகம்