24 special

கூட்டணி முறிவிற்கு காரணமே வேறாம்...!எடப்பாடி நாடகம் வெளியானது...!

edapadi, annamalai
edapadi, annamalai

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்தும் அண்ணாமலைதான் கூட்டணி முறிவிற்கு காரணம் எனவும் கூறி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது அதிமுக.இந்த சூழலில் கூட்டணி முறிவிற்கு உண்மையான காரணம் உளவுத்துறை மற்றும் தமிழக ஆளுநர் ரவி ஆகியோர் அதிமுகவின் நகர்வுகள் குறித்தும் எடப்பாடி பழனிசாமியின் திட்டம் குறித்தும் உள்துறை அமைச்சர் அமிட்ஷாவிடம் கொடுத்த அறிக்கையே காரணம் என்ற தகவல் தற்போது தமிழக அரசியல் களத்தை புரட்டி போட்டு இருக்கிறது.தமிழக ஆளுநர் ரவி சமீபத்தில் டெல்லி சென்ற நிலையில் பிரதமர் அலுவலகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பினார். அப்போது தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் தமிழக அரசியல் சூழல் குறித்தும் ஆளுநர் ரவி விரிவான விளக்கம் கொடுத்து இருக்கிறார்.


மேலும் மத்திய உளவுத்துறை மூலம் தமிழகத்தில் அரசியல் கள நிலவரம் எப்படி இருக்கிறது கூட்டணியில் போட்டியிட்டால் என்ன நிலை என்ற ரகசிய சர்வே ஒன்றும் எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை பாஜக தேசிய தலைமைக்கு கொடுத்து இருக்கிறது.உளவுத்துறை கொடுத்த அறிக்கையில் பிரதமர் மோடியை பிரதமராக கொண்டு வருவதில் அதிமுக தலைமை எந்தவித முன்னெடுப்பும் எடுக்கவில்லை மாறாக 2026 தேர்தலில் புது கூட்டணியை அமைக்கவே அதிமுக வியூகம் வகுத்து வருகிறது.திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் விசிக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் திரைமறைவில் பேச்சு வார்த்தையை தொடங்கி இருக்கிறது. கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தும் புதிய கட்சிகளிடம் பாஜக கூட்டணியில் இருக்காது கவலை படாதீர்கள் என்ற உத்தரவாதம் கொடுக்கிறது.ஜெயலலிதா இருந்தபோதே பா.ஜ.,க கூட்டணி இரண்டு இடங்களில் வென்றது மேலும் மூன்றாவது பெரிய கூட்டணியாக அதிக வாக்குகளை பெற்றது.

ஆனால் 2019 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது அதிலும் பன்னீர் செல்வம் அவரது சொந்த செல்வாக்கில் அவரது மகனை வெற்றி பெற செய்து இருக்கிறார் .அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தக்க வைக்கவே கவனமாக இருந்தார் ஏனெனில் அப்போது மக்களவை தேர்தலுடன் தினகரன் உடன் இணைந்த எம் எல் ஏ களை தகுதி நீக்கம் செய்த காரணத்தால் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் கணிசமான வெற்றியை பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்தது.இதன் காரணமாக  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., சட்டசபை இடைத்தேர்தலில் அதிக கவனம் செலுத்தியது. லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்தவில்லை.இந்தத் தேர்தலில் ஒன்பது சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

எங்குமே பாஜகவிர்கோ மோடிக்கோ அதிமுக பெரிய அளவில் உதவவில்லை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் அதிமுக படு தோல்வி அடைந்தது,அடுத்து 2021 சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க.,வை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.க கூறியதை பழனிசாமி ஏற்கவில்லை. இதனால் ஆட்சியை இழக்க நேரிட்டது. எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் இருக்கும் தலைவர்கள் தங்கள் நலனை மட்டுமே பார்க்கிறார்கள் எனவே பாஜக தற்போது தமிழகத்தில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்டால் அதிமுகவிற்கு லாபமே தவிர பாஜகவிற்கு லாபம் என்பது கிடையாது என தெளிவாக உளவுதுறை தமிழக கள நிலவரத்தை புட்டு புட்டு வைத்து இருக்கிறது.இதன் அடிப்படையில் உடனடியாக எடப்பாடி பழனிசாமிக்கு உள்துறை அமைச்சர் அமிட்ஷாவிடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.

 இதையடுத்து அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14ம் தேதி  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து அமித்ஷா தரப்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் உங்கள் கருத்தை ஏற்று குறைவான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளை பெற்று கொண்டு தேர்தலை சந்தித்தோம் ஆனால் எந்த பலனும் இல்லை  வருகின்ற தேர்தலில் புதுச்சேரியுடன் சேர்த்து 20தொகுதிகளை எங்களிடம் கொடுங்கள்.அதை கூட்டணி கட்சிகளுக்கு, நாங்கள் பிரித்து கொடுக்கிறோம். ஓபிஎஸ் TTV தினகரன் மற்றும் இன்னும் பிற  கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக பதில் சொல்லாத எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு சொல்வதாக உறுதி அளித்து வந்து இருக்கிறார்.இந்த சூழலில் தான் தமிழகம் வந்த எடப்பாடி பழனிசாமி தொகுதிகள் அதிகம் கேட்டாலும் பரவாயில்லை ஆனால் பாஜக தலைமையில் கூட்டணி என்றால் நமது தலைமை கேள்வி குறியாகும் என்று கூறி அண்ணாமலை மீது பாரத்தை போட்டு அவரை குறிவைத்து கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறாராம்.

இது உள்துறை அமைச்சர் அமிட்ஷாவிற்கும் தெரியவர மீண்டும் தன்னை பார்க்க அனுமதி கேட்ட முனுசாமி வேலுமணி உள்ளிட்ட நான்கு நபர்களை சந்திக்க மறுத்துவிட்டாராம் மொத்தத்தில் புதிய கட்சிகளுடன் அதிமுக பேச்சு வார்த்தை நடத்தியது முதல் பின்னால் பாஜகவிற்கு குழி பறித்தது முதல் அனைத்து சம்பவங்களும் பாஜக மேலிட வட்டாரதிற்கு தெரியவர இனியும் பாஜகவை ஏமாற்ற வழியில்லை என நினைத்த எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறாராம்.மொத்தத்தில் இனி தனித்து தேர்தலை சந்திக்க தமிழக பாஜக தலைமைக்கு பச்சை கொடி காட்டி இருக்கிறதாம் டெல்லி இனிதான் தமிழகத்தில் பாஜகவின் 2.0 ஆரம்பம் என்கிறார்கள் நமது டெல்லி வட்டாரங்கள்.