தமிழகத்தில் காலம் காலமாக எந்த அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகளுக்கு தீராத பிரச்சனையாக இருப்பது காவேரி நீர் ஆகவே மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இதைப்பற்றி கண்டுகொள்ளாத நிலை இருப்பதாக தமிழகத்தில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் அவ்வப்போது விமர்சிப்பது தொடர்கதையாகி உள்ளது. இதனால் இருமாநிலங்களிலும் போராட்டமானது பல வகையில் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு, மொழி இனத்தவர் பிரச்னை போன்று பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன.இதன் தொடர்கதையாக தற்போது, தமிழகத்திற்கு காவேரி நீர் வழங்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து நேற்று கர்நாடகாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழக்த்திற்கு 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி நீர் வீதம் திறந்துவிடக் கோரி காவேரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு தங்களுக்கு நீர் இல்லை இதில் எப்படி தமிழ்நாட்டிற்கு திறந்து விட முடியும்? என உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதனை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்த நிலையில், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டிய நிலைமைக்கு ஆளானது. இதற்கு எதிராக நேற்று கர்நாடக அமைப்பினர் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்ற நோக்கத்தில் பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் கடையடைப்பு பந்தை கையில் எடுத்தது. இந்நிலைமையில் கன்னட சலுவளி வாட்டாள் நாகராஜ் மேலும் 29ம் தேதி ஒரு பந்த் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும் கர்நாடகாவில் எண்ணற்ற தமிழ் மக்கள் வாழ்கின்றனர், இது எங்களது மண். இங்கிருந்து உங்களுக்கு தண்ணீர் வேண்டுமா? அல்லது இங்கு வாழும் மக்கள் முக்கியமா? என முதல்மைர் ஸ்டாலின் நீங்களே முடிவு எடுத்திக்கொள்ளுங்கள் என சவால் விடுத்தார். தொடர்ந்து, கர்நாடகத்தில் வசிக்கும் மக்களை ரயில் மற்றும் லாரி மூலம் துரத்திவிடுவோம் என திமிராக பேசியுள்ளார்.
அங்கு நடக்கும் பந்திற்கு காங்கிரஸ் அரசு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. கர்நாடகத்தில் நேற்று நடைபெற்ற பந்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் உருவபடத்தை வைத்து பாடை கட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். முன்னதாக காலையில் தமிழ்நாடு லாரி ஓட்டுனரை அடித்து நிர்வாணமாக்கியது. இதற்கு இதுவரை தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து கர்நாடக அரசுக்கு எந்த கோரிக்கையும் வலியுறுத்தவில்லை. இதுவே தமிழ்நாட்டில் ஸ்டாலினை பற்றி தவறுதலாக மீம்ஸ் சித்தரித்து போட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அரசு அங்கு பாடை கட்டிய விவகாரம் பூதாகரமான நிலையில் கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவில்லை என திமுக அரசை சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி கட்சி தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்ற நிலையில் இந்திய கூட்டணியில் இருக்கும் திமுக அரசு இதுவரை அவர்களிடம் ஏதும் வலியுறுத்தாமல் மௌனம் காக்கின்றது என குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்நாடு-காங்கிரஸ் மாநிலத்திற்கு இடையே பெரும் பதற்றம் நிலவ தொடங்கியுள்ளதால், முன்கூட்டியே பாதுகாப்பை வலியுறுத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் 29ம் தேதி நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.அன்று மீண்டும் கர்நாடகாவில் பந்த் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.