24 special

திருமாவளவனுக்கு சூடு போட்ட சம்பவம் வைரல்..!

Thirumavalan
Thirumavalan

திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றிற்கு சூடு போடும் வகையில் புள்ளி விவரங்களை அடுக்கியுள்ளார் இளங்கோ பிச்சாண்டி, இவர் தெரிவித்த தகவல் தற்போது கடும் வைரலாக பரவி வருகிறது. அது பின்வருமாறு :-


தலித்துகளைப் பொறுத்தமட்டில் வேறெந்த முழக்கத்தையும் விட தலித்துக்கு அதிகாரம் அளித்தல் ((Dalit empowerment) என்ற முழக்கம் அதிமுக்கியமானது. தலித் விடுதலை, தலித் சமத்துவம், சமஉரிமை ஆகிய எல்லாவற்றுக்கும் முன்நிபந்தனையாக இருப்பது தலித்துக்கு  அதிகாரம் அளித்தல்.

தலித்துக்கு அதிகாரம் அளித்தல் என்பதன்  பொருள் என்ன? தலித்துகள் கவுன்சிலராக வேண்டும்; மேயராக வேண்டும்; MLA, MP ஆக வேண்டும், அமைச்சராக வேண்டும். முதல்வராக வேண்டும், பிரதமராக வேண்டும்,

ஜனாதிபதியாக வேண்டும். அப்படி ஆனால்தான்  தலித்துகள் அதிகாரம் பெற்றதாகப் பொருள்.இந்தியாவின் மாநிலக் கட்சிகளால் தலித்துக்கு அதிகாரம் அளிக்க இயலாது. எப்படியெனில்,மாநிலக் கட்சிகள் அனைத்தும் குடும்ப அரசியல்  கட்சிகள் என்பதால் தமது குடும்பம் அதிகாரம்  பெறுவதில் மட்டுமே அவை கவனம் செலுத்தும்.

உதாரணமாக, உதயநிதியை முதல்வர் ஆக்குவதில்தான் திமுக கவனம் செலுத்துமே  தவிர, தலித்துக்கு அதிகாரம் அளிப்பது என்பதெல்லாம்  திமுகவுக்கு மயிருக்குச் சமானம். அடுத்து மாநிலக்  கட்சிகளின் வீச்சு (reach) குறைவு. ஒரு மாநிலக் கட்சியால் ஒரு தலித்தை ஜனாதிபதி ஆக்க முடியாது.

எனவே தலித்துக்கு அதிகாரம் அளித்தல் என்பது இந்தியாவில் தேசியக் கட்சிகளால் மட்டுமே முடியும்.இந்தியாவில் இதுவரையிலான தலித்துக்கு  அதிகாரமளித்தலில் பெரும்பகுதி காங்கிரஸ் கட்சியால்தான் நடந்திருக்கிறது.காங்கிரஸ் கட்சிதான் தலித்துகளை மாநில  முதல்வர்களாக்கி இருக்கிறது. அதிக அளவில் மத்திய அமைச்சர்கள் ஆக்கி இருக்கிறது.துணை  ஜனாதிபதி, ஜனாதிபதி ஆக்கி இருக்கிறது. சட்ட  மன்ற நாடாளுமன்ற சபாநாயகர் ஆக்கி இருக்கிறது.

கே.ஆர்.நாராயணனை ஜனாதிபதி ஆக்கியது யார்?காங்கிரஸ்தானே!காங்கிரசை விஞ்சி நிற்கிறது பாஜக! தலித்துக்கு  அதிகாரம் அளித்தலில் இன்றைய இந்தியாவில்  பாஜகதான் முதல் இடத்தில் இருக்கிறது. ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி ஆக்கி உள்ளது பாஜக.

காங்கிரஸ் கட்சியானது இந்தியாவில் முக்தி அடைந்து  விட்டது. எனவே அக்கட்சியால் தலித்துக்கு அதிகாரம் அளித்தலில் ஒரு கடுகளவு கூட எதுவும் செய்ய இயலாது. காங்கிரஸ் குடும்ப அரசியலின் இளவரசர் ராகுலுக்கும் இளவரசி பிரியங்காவுக்கும் ஒரு எம்பி பதவியைப்  பெறுவதற்கே  இன்று அக்கட்சி பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டிய நிலையில், காங்கிரசால் இனி தலித்துக்கு அதிகாரம் அளித்தலில் என்ன செய்ய இயலும்??பிற தேசியக் கட்சிகளான CPI, CPM கட்சிகளில்  தலித்துகளுக்கு கடைசிப் பந்தி உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்  கமிட்டியிலோ பொலிட் பீரோவிலோ ஒருபோதும் ஒரு தலித் இடம் பெற்றதில்லை; இடம் பெறவும்  போவதில்லை. மார்க்சிஸ்ட் கட்சிக்கு நாடாளுமன்ற சபாநாயகர் பதவி கிடைத்தபோது, அக்கட்சி  அப்பதவியில் பார்ப்பனரான சோம்நாத்  சட்டர்ஜியைத்தானே அமர்த்தியது யாரேனும் தலித்தை அல்லது OBCயை அமர்த்தியதா, இல்லையே!

மத்திய அமைச்சரவையில் CPI பங்கேற்றபோது,  அக்கட்சியானது தனக்குக் கிடைத்த இரண்டு காபினெட் அமைச்சர் பதவிகளில் இரண்டு  உயர்சாதியினரைத்தானே (இந்திரஜித் குப்தா,  சதுரானந்த் மிஸ்ரா) நியமித்தது! அமைச்சர் பதவிக்குத் தகுதியான ஒரு தலித்கூடவா  CPI கட்சியில் இல்லாமல்  போனார்கள்? இந்த இடத்தில் பகுஜன் கட்சித் தலைவர் மாயவாதியை  மிகவும் சிறப்புக்கு உரியவராகச் சுட்டிக் காட்ட வேண்டும்.

மற்றக் கட்சிகளின் தயவு இல்லாமல், தனது  சொந்த பலத்தில் அவர் உத்தரப்  பிரதேச முதல்வர்  ஆனார். ஒருமுறை அல்ல, நான்கு முறை உபி முதல்வராக இருந்தார். தலித் ஆளுமையின் உச்சம்  மாயாவதிதான்! தலித் அதிகாரம் பெறுதலின் உச்சமும் மாயாவதிதான்.

தலித் அதிகாரமளித்தலில் மிகவும் பரிதாபத்துக்கு  உரிய மாநிலம் தமிழ்நாடுதான். இங்கு  1967க்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சிதான் தலித் அதிகாரமளித்தலில் முன்னணி வகித்தது. 1967ல்  ஆட்சியில் இருந்து விரட்டப்பட்ட காங்கிரஸ், இன்று உதயநிதி ஸ்டாலினின் கடைக்கண் பார்வைக்கு  ஏங்கிக் கிடக்கிறது. அக்கட்சியைப் பொறுத்தவரை  தலித்துக்கு அதிகாரமலைப்பது அல்ல, காங்கிரசுக்கு  அதிகாரமளித்தல்தான் இன்று அதன் ஒரே அஜெண்டா. 

தமிழ்நாட்டின் பிரதான தலித் கட்சியான விசிக  பெருத்த நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இத்தனை ஆண்டுகளில் அக்கட்சியால் ஒரு மாநில அமைச்சர்  பதவியைக் கூடப் பெற முடியவில்லை. ஆனால் பாஜக ஒரு தலித்துக்கு அதிகாரமளித்து அவரை மத்திய இணை அமைச்சராக்கி உள்ளது. தலித்துகளிலேயே  மிகவும் புறக்கணிக்கப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த திரு முருகனுக்கு கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை முதலில் அளித்த பாஜக, அதன் பின்னர் அவரை  மத்திய இணையமைச்சராக்கி உள்ளது. 

அமைச்சராகும்போது திரு முருகன் ஒரு MPஆக இல்லை. தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா எம்பி ஆகும் அளவுக்கு  பாஜகவுக்கு இங்கு ஒன்றும் இல்லை. ஆனாலும் திரு.முருகனை மத்திய பிரதேசம் கொண்டு சென்று,

அங்கிருந்து அவரை ராஜ்ய சபா எம்பி ஆக்கி, அத்துடன் மத்திய இணை அமைச்சராகவும் ஆக்கி உள்ளது பாஜக. தலித் அதிகாரமளித்தல் என்பதன் பொருள் இதுதான். இதை இன்று பாஜகவால் மட்டுமே செய்ய முடியும். வேறு எந்தக் கட்சியாலும்  செய்ய இயலாது.

 திமுகவின் சபரீசன் ஒரு ராஜ்ய சபா எம்பி பதவியை தலித்துக்குத் தருவாரா? உலகம் அழிந்தாலும் தர மாட்டாரே ஐயா!உபியில் ஒரு தலித் பெண். பெயர்......................................... பெயரை நீங்கள்தான் சொல்ல வேண்டும்; நீங்களும்  பேப்பர் படிக்க வேண்டும். எல்லாம் நானே SPOON FEEDING செய்ய மாட்டேன். இந்த தலித் பெண்ணை உபியில்  ஒரு மாநகராட்சியின் மேயர் ஆக்கியது பாஜக.   

 அடுத்து இப்பெண்ணை ஒரு மாநிலத்தின் ஆளுநராக ஆக்கியது. பின் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, உபி சட்ட மன்றத் தேர்தலில் அப்பெண்ணை  பிரச்சாரம் செய்ய வைத்தது. தற்போது அந்தப் பெண்ணை துணை முதல்வர் ஆக்க பாஜக திட்டம் என்று செய்திகள் வருகின்றன. ஒரு தலித் பெண்ணுக்குத்தான் எத்தனை 

உச்சங்கள்! இதுதான் தலித்துக்கு அதிகாரமளித்தல்!தமிழ்நாட்டில் ஒரு தலித்துக்கு துணை முதல்வர்  வழங்க திமுக முன்வருமா? ஆந்திராவில் முதல்வர்  ஜெகன்மோகன் ரெட்டி ஒரு தலித்துக்கு துணை 

முதல்வர் பதவி வழங்கி உள்ளார். இங்கு கனவிலும்  அது கைகூடுமா? புரட்சியாளர்  ஸ்டாலின் தலித் ஒருவருக்கு கனவிலாவது துணை முதல்வர்  பதவி வழங்க முன்வருவாரா?திருமாவளவன் Dalit empowerment என்று அவ்வப்போது  பேசுவார் தவிர, உண்மையில் அதில் அக்கறை 

இல்லாதவர். உதயநிதியின் பெயரை வலது  கையில் பச்சை குத்திக்கொண்டு ஸ்டாலின்  குடும்பத்தைப் பல்லக்கில் வைத்துச் சுமந்து கொண்டு செல்பவர். அவர் ஒரு பல்லக்குத் தூக்கி.தேர்தலில் திமுகவின் சின்னத்தில்தான் நிற்க வேண்டும்; இல்லாவிட்டால் முதுகுத் தொலியை உரித்து விடுவேன் என்று உதயநிதி வற்புறுத்தினார்.

மானமிகு புரட்சியாளர் திருமாவளவன் அடங்க மறுத்தாரா? அத்து மீறினாரா?ஒரு மயிரும் இல்லை.உபியில் Dalit empowerment நடந்து கொண்டிருக்கிறது.பாஜக அதை நடத்திக் காண்பிக்கிறது. தற்போதைய. சூழலில்  Dalit empowermentல் அக்கறையுள்ள கட்சிகள் பாஜகவுடன் இணைந்துதான் அதைப்பெற முடியும். இங்குள்ள அரசியல் சூழல் அப்படித்தான் இருக்கிறது.

திருமாவளவன்  Dalit empowermentல் அக்கறை இல்லாத  வெறும் பல்லக்குத் தூக்கி என்பதை நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.பின்குறிப்பு: படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் பேபி ராணி மவுரியா. இவர் ஒரு தலித் பெண்மணி. இவர் ஆக்ரா நகர மேயராக இருந்தார். பின்னர்  அவரை உத்தரகாண்ட் மாநில ஆளுநர் ஆக்கினார் மோடி. தற்போது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு உபி சட்டமன்றத் தேர்தலில்  தீவிரப்  பிரச்சாரம் செய்தார். இவர் உபி மாநில துணை முதல்வர் ஆகக்கூடும் என்று பேசப்படுகிறது.

ஒரு தலித்துக்குத்தான் எத்தனை பதவிகள்? இதுதான்  Dalit empowerment என குறிப்பிட்டுள்ளார் இளங்கோ பிச்சாண்டி. பாஜகவை தலித்துகளுக்கு எதிரான இயக்கம் போன்று பிரச்சாரம் செய்துவரும் திருமாவளவன், கம்யூனிஸ்ட் போன்ற இயக்கங்களுக்கு இளங்கோ பிச்சாண்டி பகிர்ந்த தகவல் மிக பெரிய அளவில் விவாத பொருளாக மாறியுள்ளது. நேரடியாக சூடு போட்ட சம்பவமாக அமைந்துள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.