
பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டியது போன்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் ஆதரவாளர்களுக்கும் தக்க பாடம் புகற்ற வேண்டும் என்ற விவாதம் சமூக வலைத்தளத்தில் கடும் விவாதமாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் உதயகுமார் செந்திவேல் குறிப்பிட்ட விஷயங்கள் தற்போது கவனம் பெற்று இருக்கிறது அதில் ஆபரேஷன் சிந்தூர் 2 நிச்சயம் இந்தியாவில் வேண்டும் என குறிப்பிட பட்ட தகவல்கள் மக்களை நோக்கி கேள்வியை எழுப்பி இருக்கிறது அதில்,
இந்தியா பாகிஸ்தான் மீது தொடுத்த ஆபரேஷன் சிந்தூர் விஷயத்தில் நாம் வென்று விட்டோம். நினைத்த இடங்களை நமது விமான படை வீரர்கள் சரியான நேரத்தில் முடித்து இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த தேசம் எப்போதும் கடமை பட்டு இருக்கிறது போரில் வீர மரணம் அடைந்தவர்கள் பெயரை விரைவில் அரசு அறிவிக்கும்.
இந்தியாவின் பாகிஸ்தான் மீதான தாக்குதலை உலக நாடுகளை சேர்ந்த போரை கவனிக்கும் ஆய்வாளர்கள் பலரும் ஆச்சர்யமாக அணுகுகின்றனர் குறிப்பாக இந்திய இராணுவத்தில் தரை படை வலுவானது எனவும் இந்திய விமான படை வழுவில்லாதது எனவும் இதுநாள் வரை நினைத்து வந்தனர், ஆனால் அவற்றை கடந்த 7 முதல் 10 தேதிகளில் உடைத்து இருக்கிறது இந்திய விமான படை.
உலகில் எந்த நாடு புதிய டெக்னாலஜி மற்றும் கண்டுபிடிப்பில் தன்னிறைவு பெறுகிறதோ அந்த நாடு உலக அளவில் போர் மற்றும் அனைத்திலும் முன்னணியில் இருக்கும் இஸ்ரேல் அந்த வகையில் தான் இன்றும் ஆதிக்கம் செலுத்துகிறது, இதில் அமெரிக்கா எப்போதும் முன்னிலையில் வர அதன் டாலர் வார்த்தகமே காரணம் ஏன் என்றால் திறமையாளர்களை உருவாக்குவதை விட அவர்களை வாங்கி தற்போது வரை அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது.
ஆனால் பாக்கிஸ்தான் உடனான இந்த போரில் இந்தியா வெளிநாட்டு ஆயுதங்களை பயன் படுத்தாமல் முழுக்க முழுக்க இந்தியாவின் சொந்த தயாரிப்பை பயன்படுத்தியது. காரணம் இந்தியாவிடம் s400 உள்ளது போன்று ரசியா சீனாவிற்கும் s400 கொடுத்து இருக்கிறது இதனை மையமாக கொண்டு தான் சீனா தனது வான் பாதுகாப்பு விஷயத்தை பாகிஸ்தானிடம் விற்றது.
எப்படியும் S400 ரபேல் போன்றவற்றை இந்தியா பயன்படுத்தும் என பாகிஸ்தான் நினைத்த நிலையில் இந்தியா தனது சொந்த திறன் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் பெரும் சாதனை செய்து இருக்கிறது, இன்னும் சொல்ல போனால் இது தான் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. உலகில் இராணுவ தளவாடங்களை அதிக அளவில் வாங்கி வந்த நாடு கடந்த 10 ஆண்டுகளில் புதிய கண்டுபிடிப்பை கண்டு பிடித்து எதிரி நாட்டை தும்சம் செய்வதை எந்த வல்லரசும் விரும்பாது அதை தான் அமெரிக்கா செய்தது.
இந்த யுத்தத்தில் இந்தியா வென்றது வரலாற்றில் நிலைத்து இருக்கும், இது ஒரு புறம் என்றால் அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்த நவீன யுத்தத்தில் இந்திய இராணுவத்தின் பின்னால் ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளும் நின்றன ஆனால் சமூக வலைத்தளத்தில் ஒரு கூட்டம் சொந்த நாட்டு அரசை இராணுவத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் குறிப்பாக இந்தியா செய்த சாதனையை தவறாக கூறி முன்னெடுப்பு எடுத்து வருகின்றனர், தாய் நாட்டில் இருக்கிறோம் அதன் பாலை குடித்து வளர்ந்தோம் என்ற துளியும் கூச்சம் இல்லாமல் அரசியல் காரணங்களால் நம் அரசை எதிர்த்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த யுத்தம் தெளிவாக ஒன்றை உணர்த்தி இருக்கிறது போரில் வெற்றியே பெற்றாலும் அதை ஏற்று கொள்ள மனமில்லாத நபர்கள் இந்தியாவில் அதிகரித்து இருக்கிறார்கள் முதலில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வராமல் நிச்சயம் இந்தியா எதிரி நாட்டுடன் முழு வெற்றி பெற்றாலும் இங்கு பயன் இல்லை.
நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் குடியரசு தலைவரை சந்தித்த புகைப்படங்கள் வைரலானது நிச்சயம் அவர்கள் ஏதோ ஒன்றை உணர்த்தி இருக்கிறார்கள் விரைவில் நல்ல செய்தி வரும் என்று பார்க்கலாம்.
ஆபரேஷன் சிந்தூர் ஒன்று பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களை தும்சம் செய்தது போன்று ஆபரேஷன் சிந்தூர் 2 விரைவில் இந்தியாவில் உள்ள இந்தியாவின் இறையான்மைக்கு எதிராக கருத்து தெரிவித்த பலர் மீது நிச்சயம் துல்லிய தாக்குதலை நடத்த வேண்டும் என இந்த நாட்டின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு நபர்களின் வேண்டுதலாக உள்ளது. விரைவில் அது நடக்கும் என குறிப்பிட்டுள்ளார்.