24 special

ஊழல் வரிசையில் அடுத்தது மெயின்ரோடு அமைச்சர்!....சிக்கியது முக்கிய ஆவணம்!

amaichar velu
amaichar velu

தமிழக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 80க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இன்று காலையில் இருந்து நடைபெறும் சோதனை ஒரு வாரத்திற்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவுக்கு நெருக்கடி மேல் நெருக்கடி விழுந்து வருகிறது.தமிழகத்தில் மாதம் மாதம் வருமான வரித்துறை சோதனை கையில் எடுத்து ஊழல் செய்பவர்களை மக்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றனர்.


அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழலில் சிக்கி சிறையில் உள்ளார். அவரை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி சிக்கினார். இவர்களின் வரிசையில் அடுத்ததாக கடந்த மாதம் திமுக எம்பி ஜெகத்ரட்ச்சகன் தொடர்புடைய இடங்களில் வரைக்குமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சுமார் ஒருவாரமாக சோதனை நடத்தினர்.இந்த நிலையில் நவம்பர் மாதத்தில் வருமான வரித்துறை திமுக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு வைத்துள்ளது.

இன்று காலையில் இருந்தே சென்னையில் தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி மேலும் கரூர் மாவட்டத்திலும், கோவை மாவட்டத்திலும் அவருக்கு சொந்தமான அனைத்து இடத்திலும் அதிரடியாக சோதனை ஆரம்பித்துள்ளனர்.  தொடர்ந்து, திருவண்ணாமலையில்  அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவருடைய மகன் எ.வ.வே. கம்பன், எ.வ.வே. குமரன் ஆகியோர் தொடர்புடைய இல்லம், அருனை மருத்துவமனை,கல்லூரி, காசா க்ராண்ட் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அமைச்சரின் வாரிசுகளின் தொடர்பான இடங்களிலும் சோதனை தொடங்கியுள்ளனர். 

இந்த சோதனையில் எந்த நேரத்திலும் அமலாக்கத்துறை இணைந்து செயல்படலாம் என்று தெரிகிறது. அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய வெளி மாநிலமான தெலுங்கானா, கர்நாடக மாநிலத்திலும் இந்த சோதனையை தொடங்கிள்ளனர். வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 80 இடங்களில் நடைபெறும் இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களும், தங்க கட்டிகளும், வெளிநாட்டு கரன்சிகளும் சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ரியல் எஸ்டேட் மற்றும் கிரேனைட் தொடர்பான இடத்தில சோதனை நடைபெறுவதால் முக்கிய ஆவணங்கள் சிக்கி அமைச்சர் வேலு கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 

பொதுப்பணித்துறைக்கு பொருட்களை விநியோகம் செய்யும் அமித் என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டதால் நிச்சயம் முக்கியமான ஆதாரம் கிடைத்திருக்கும் அதன் அடிப்படையிலே ஐடி ரெய்டை தொடங்கியதாக பார்க்கப்படுகிறது. அமைச்சார் எ.வ. வேலு தொடர்புடைய இந்த சோதனைக்கு வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. திமுக கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த சோதனை நடைபெறுவதாக திமுக முக்கிய புள்ளிகள் குற்றம் சட்டி வருகின்றனர். முக்கியமான தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்ள நமது Tn NEWS24 பக்கத்தில் இணைந்திருங்கள்.