![ev velu, meena jayakumar](https://www.tnnews24air.com/storage/gallery/ijhDzFIfmS0Wp0SXlKVQnG1qe9yHu5YehcnzeisN.jpg)
தமிழகத்தில் வருமான வரித்துறை சிறப்பாக வேலை செய்து வருகிறது. கடந்த சில மாதமாக ஆட்சியில் இருக்கும் முக்கிய புள்ளிகளின் வரி ஏய்ப்பு செய்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முனைப்பில் செயல்பட்டு வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் தான் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளனர்.இன்று காலை 6.30 மணி முதல் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் சோதனையை மேற்கொண்டனர். திருவண்ணாமலை, சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அமைச்சர் எ.வ.வேலு சொந்தமான கல்லூரி, மருத்துவமனை ஆகிய இடங்களில் சோதனையில் ராணுவ அதிகாரிகள் மற்றும் மத்திய பாதுகாப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதன் தொடர்ச்சியாக, கோவையில் ராமநாதபுரம் சாலையில் அமைத்துள்ள திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் என்பவரது வீட்டிலும் மூன்று கார்களில் அதிகாரிகள் வந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இப்போது அமைச்சர் வேலுவுக்கும், கோவை ஜெயக்குமார் என்பவருக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுந்தது. ஒரு பக்கம் மீனா ஜெயக்குமார் அமைச்சர் எ.வ வேலுக்கு நெருக்கிய சொந்தம் என்று திமுக வட்டாரங்களே கூறி வந்தனர். கோவையில் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில், பொதுப்பணித்துறையில் அமைச்சாராக இருக்கும் எ.வ.வேலு வரி ஏய்ப்பு செய்த பணத்தை கோவையில் முதலீடுகள் ஏதும் செய்துள்ளாரா என்ற கோணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.
மீனா ஜெயக்குமார் வீடு மட்டும் அல்லாமல் அவரது மகன் வீட்டிலும் ஐடி ரெய்டு நடந்துவருவதால் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரியல் எஸ்டேட்டில் அவர் ஏதேனும் முறைகேடு செய்திருக்கிறாரா என்று சோதனை நடைபெறுகிறது. கோவை மீனா ஜெயக்குமாரை பொறுத்தவரை கட்சியை கடந்து கோவையில் முக்கிய பெண் தொழிலதிபராகவும் திகழ்கிறார். கடந்த மாதம் கோயம்பத்தூரில் நடைபெற்ற அமலாக்கத்துறை லாட்டரி மார்ட்டின் வீட்டில் சோதனை நடைபெற்று வந்தது. லாட்டரி மார்ட்டின் மனைவி லீமா ரோசும், மீனா ஜெயக்குமாரும் மிகவும் நெருங்கிய தோழிகள் ஆவர். இவர் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு பினாமி என்று கூறப்படுகிறது.
இவரது வீட்டில் இருந்து தற்போது பல முக்கிய ஆவணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக மீனா மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அவரது கணவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் இருவரும் வருமான வரித்துறைக்கு ஒத்துழைத்து தந்து வருகின்றனர். அமைச்சரின் வழக்கறிஞர் ஜெயராஜ் தெரிவித்தது, கோவை மீனா ஜெய்குமாருக்கும் எவ வேலும் உறவினர்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கோயம்பத்தூர் பீளமேடு Sheffielt Tower சோதனை நடைபெறுகிறது. இது இயற்கை உணவு மற்றும் கட்டுமானம் தொடர்பான நிறுவனம் இது மீனா ஜெயக்குமாரின் மகனின் சொந்தமான நிறுவனம் ஆகும்.இது போல் கோவையில் மட்டும் 5 இடத்தில் சோதனை நடைபெறுகிறது. இது மாலை வரை சோதனை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.இதனிடையே மீனா ஜெயக்குமார் வீட்டில் சோதனை நடைபெறுவதால் அவரிடம் வரவு செலவு கணக்கு வைத்துள்ள பலரும் கலக்கம் அடைந்து காணப்படுகின்றனர்.
CONTENT BY: SARATHKUMAR.K