நாடாளுமன்ற தேர்தல் தொடங்குவதற்கு சில காலமே உள்ள நிலையில் தற்போது தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முன்னதாக அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று முறித்து கொண்டது இதன் காரணமாக பாஜக தலைமையில் இருந்து எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு தமிழ்நாடு திரும்பிய அண்ணாமலை "என் மண் என் மக்கள்" பாதயாத்திரை அக்., 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்திருந்தார். முன்னதாக அறிவித்தபடி பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அக்., 05 நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். கூட்டணி முறிவிற்கு பிறகு இன்று நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் முதல் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் வரை காத்து கொண்டிருந்தனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலின் வியூகம் எப்படி இருக்கும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.
முன்னதாக ஊடகங்கள் அனைத்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எந்த விதமான தீர்மானங்கள் அறிவிக்கப்படும் என ஏதிர்பார்த்து தலைப்பு செய்திகளாக வெளியிட்டிருந்தனர். பிறகு கூட்டம் தொடங்கிவிட்டதாகவும் மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமல் தொடங்கியதாக செய்திகள் வெளியிட்டிருந்தன. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டதிற்கு மாநில தலைவர் அண்ணாமலை சரியாக 11:50 மணிக்கு கூட்டத்திற்கு வருகை புரிந்தார் அவருக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முகத்தில் மாஸ்க் அணிந்த படி வந்த அண்ணாமலை உள்ளே செல்வதற்கு முன் அங்கு வந்திருந்த மாற்று திறனாளிக்கு புங்கொத்து கொடுத்து நலம் விசாரித்து விட்டு மேடைக்கு சென்றார். மேடையில் முதலில் பேசிய மாநிலத்தலைவர் அண்ணாமலை, இந்த கூட்டத்திற்கு மத்திய இணையமைச்சர் எல். முருகன் கலந்து கொள்ள இருந்த நிலையில் ராஜ்பவனில் வள்ளலாரின் 200வது விழா நடைபெறுவதால் இங்கு வர முடியவில்லை.
சுதாகர் ரெட்டி அவருக்கு வேறு பணி இல்லாத காரணத்தால் எனக்கு தொலைபேசியில் தெரிவித்து விட்டனர். பின்னர் கூட்டரங்கில் உள்ள அனைத்து ஊடக நண்பர்களை வெளியில் காத்திருக்க சொன்னார். கட்சியின் முக்கிய ஆலோசனைகள் நடைபெறுவதால் நிகழ்வுகள் ஏதும் வெளியில் தெரிய வேண்டாம் என காரணத்தால் ஊடகங்களை அனுமதிக்கவில்லை. இதன் பிறகு தான் முக்கியமான சமிக்கைகள் நடந்துள்ளது. அதாவது, பாஜக தலைமையில் தனி அணி அமைப்பது குறித்தும், பாஜக பூத் ஏஜெண்டுகளை வலுப்படுத்துவது குறித்தும் மாவட்ட நிர்வாகிகளுக்கு அண்ணாமலை ஆலோசித்தார். இந்த ஆலோசனை மூலம் "கூட்டணியில் இருந்து விலகுபவர் விலகி செல்லட்டும் என்று அதிமுகவை விமர்சித்தார்" மேலும், பாஜக தனித்து களமிறங்குவது குறித்து டெல்லி தலைமை சிக்கனல் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதயாத்திரை ஒத்திவைத்த நிலையில் இருக்க கூடிய 10 நாட்கள் இடைவெளியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர் பார்க்கபடுகிறது. இரண்டாம் கட்ட பாதயாத்திரையும், மூன்றாம் கட்ட பாதயாத்திரை தொடங்கும்போது அண்ணாமலை அதிரடி முடிவில் இறங்குவார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இதுநாள் வரை அதிமுகவுடன் கூட்டணி சேர சில கட்சிகளும் , அதிமுகவில் உள்ளவர்கள் சிலர் முயன்ற போதும், டெல்லி தலைமை அண்ணாமலைக்கு பக்க பலமாக இருந்தது என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் முடிந்த பின் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என்று மாநில நிர்வாகிகள் கூறஇருக்கின்றனர்.