தமிழக தேர்தலில் மாற்றம் கொண்டு வருவதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை 28ம் தேதி ராமேஷ்வரத்தில் "என் மண் என் மக்கள்" என்ற பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த நடைப்பயணத்தை தொடங்கி வைத்த நிலையில், அண்ணாமலை நாள்தோறும் மக்களிடம் சென்று குறைகளை கேட்டறிந்தார். இந்த பாதயாத்திரை தொடர்பாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை தடுத்து வந்தது தமிழ் நாட்டில் ஆளும் கட்சியான திமுக அரசு. அதெயெல்லாம் கண்டு கொள்ளாமல் கொட்டும் மழையிலும் பாதயாத்திரையை தொடர்ந்தார் அண்ணாமலை. நாளடைவில் மக்களிடம் இந்த யாத்திரை மூலம் மாற்றம் ஏற்பட தொடங்கியது. முதற்கட்ட யாத்திரை கடந்த 22-ந்தேதி நெல்லையில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட யாத்திரை செப்டம்பர் 4ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து கோயம்பத்தூரில் நடைபெற்ற யாத்திரையின் போது,கூட்டணி கட்சியான அதிமுக, பாஜகவுடன் கூட்டை இல்லை என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின் பாஜக தலைமை கூட்டணி முறிவு குறித்து எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
தற்போது பாதயாத்திரைக்கு கேப் விட்டு டெல்லி சென்று கூட்டணி முறிவு குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அக்.,06ம் தேதி மீண்டும் பாதயாத்திரை தொடங்கவிருந்த நிலையில் மாநில தலைவர் அண்ணாமலைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அக்.,16ம் தேதிக்கு பாத யாத்திரையை ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் இன்று பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு முன் மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தனித்து போட்டியிடும் என தகவல் வெளியிட்டார். இதன் மூலம் மீண்டும் அதிமுகவை பாஜகவில் இணைக்கும் எண்ணம் இல்லை என கூறப்படுகிறது. ஆலோசனை கூட்டம் மிகவும் பாதுகாப்பாக நடந்தது. முன்னதாக அண்ணாமலை பேசும்போது அணைத்து ஊடகத்தினரையும் வெளியில் இருக்கும்படி கூறினார்.
ஆலோசனை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை; கூட்டணி பிரச்னை குறித்து டெல்லி மேலிடத்தில் ஆழமாக சொல்லிவிட்டேன். இறுதி முடிவை இனி தேசிய தலைமை தான் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும்: அது அவர்களின் விருப்பம் என மறைமுகமாக அதிமுகவை விமர்சித்தார். தொடர்ந்து தமிழகத்தில் பாஜக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்று கூறினார். அதிமுக விலகியதால் சந்தோஷமோ, வருத்தமோ கிடையாது என்று தெரிவித்தார்., மேலும் 39 தொகுதிகளிலும் பாஜக நாடாளுமன்றக் குழு அமைக்கப்படவுள்ளதாக அறிவித்தார். அக்., 16ம் தேதி தொடங்கும் பாதயாத்திரை மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து அதன் பின் பாத யாத்திரையின் நிறைவு விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. அதில், பிரதமர் மோடி பங்கேற்க்கவுள்ளதாகவும், நிறைவு விழாவில் 10லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த நிர்வாகிகளுக்கு டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.