24 special

கடலில் இறங்கும் இரண்டாவது பெரிய ஸ்டெல்த் பி17ஏ..!

nevy
nevy

புதுதில்லி : கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் போர்க்கப்பல் தயாரிப்பு நிறுவனம் இந்திய கடற்படையின் கடல்சார் திறன்களை மேலும் வலுப்படுத்தும்விதமாக நாட்டின் இரண்டாவது பி17ஏ ஸ்டெல்த் போர்க்கப்பலை வடிவமைத்துள்ளது. வருகிற 15ம் தேதி அந்த கப்பலை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடியசைத்து கப்பற்படையில் இணைக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இந்த பி17ஏ ஸ்டெல்த் போர்க்கப்பல் அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்கால கெட்ஜெட்டுக்கள் பொருத்தப்பட்டு ஜிஆர்எஸ்இ மூலம் விரிவான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் ப்ராஜெக்ட் 17ஏ வின்கீழ் மூன்று கப்பல்களை கட்டமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு முதலாவது கப்பலாக கடலில் இறங்கவுள்ளது.

GRSE அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் " ஜூலை 15 அன்று ஹூக்ளி ஆற்றின்கரையில் அமைந்துள்ள GRSE பிரதான வளாகத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த போர்க்கப்பலை தொடங்கவுள்ளார்" என குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில் போர்க்கப்பலின் வண்ணப்பூச்சுக்கள் இறுதிக்கட்ட பணியில் உள்ளது.

GRSE ஆல் கட்டப்பட்ட முதல் பி 17ஏ பொற்கப்பாலானது கடந்த டிசம்பர் 2020ல் அப்போதைய பாதுகாப்புப்படைகளின் தலைமை தளபதியான ஜெனரல் பிபின் ராவத் அவர்களின் மனைவி மதுலிகா ராவத் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த கப்பல்கள் ஒவ்வொன்றும் ஏவுகணை வழிகாட்டி போர்க்கப்பல்களாகும். இந்த கப்பல்கள் 149மீட்டர் நீளம் கொண்டது.

இதன் எடை தோராயமாக 6,670 டன்கள் மற்றும் இடப்பெயர்ச்சி வேகம் 28 நாட்டிகல் மைல்கள்" என கூறினார். இந்திய கடற்படை இந்த ரக ஸ்டெல்த் போர்க்கப்பல்கள் ஏழு வடிவமைக்க கூறியிருந்தது. அதில் மூன்று போர்க்கப்பல்கள் GRSE க்கும்  நான்கு மஸாகான் டாக் லிமிடெட் நிறுவனத்திற்கும் சென்றது. ப்ராஜெக்ட் 17ஏ திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட இந்தக்கப்பலின் ஒப்பந்த விலை 19,294 கோடியாகும்.

தற்போது இந்த GRSE நிறுவனம் கயானா நாட்டிற்கு ஒரு பயணிகள் கப்பல் பங்களாதேஷிற்கு ஆறு ரோந்துகப்பல்கள் உட்பட 23 கப்பல்களின் கட்டுமானத்தை உள்ளடக்கிய ஆறு திட்டங்களில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருவதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.