24 special

திமுக பிரமுகருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை "அரபு நாடுகளே" மிரண்டது..?!

DMK
DMK

போலீசாரை ஆபாச வார்த்தைகளில் பேசி திட்டிய திமுக கவுன்சிலரின் கணவரை திமுகவில் இருந்து "தற்காலிகமாக நீக்கம்"  செய்த சம்பவம் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது, உலகிலேயே இப்படி ஒரு தண்டனையை எந்த கட்சியும் கொடுத்து இருக்காது, காவல்துறையினரை ஆபாச வார்த்தைகளில் மிரட்டிய நபர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதோடு கைது செய்து சிறையில் அடைந்திருக்க வேண்டும்.


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்த காவல்துறையால் காவல்துறையினரை அவதூறாக பேசி மிரட்டிய நபரை கைது செய்யமுடியாதது ஏன்?  எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர், இந்த சூழலில் திமுக கொடுக்கும் தண்டனையை பார்த்து நெட்டிசன்கள் கிண்டல் அடிக்க துவக்கியுள்ளனர்.

சாதியை கூறி மிரட்டிய அமைச்சருக்கு சாதி சார்ந்த அமைச்சரவை ஒதுக்கீடு செய்துள்ளார்கள், போலீசாரை திட்டிய பிரமுகரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்துள்ளனர் அடடா ! இதல்லவா தண்டனை எனவும் அரபு நாடுகளே இந்த தண்டனையை பார்த்து மிரண்டு போயுள்ளதாக நெட்டிசன்கள் கிண்டல் அடிக்க தொடங்கியுள்ளனர்.

திமுக அரசின் நடவடிக்கையை கேள்வி எழுப்பியுள்ளார் பெண்களின் குரல் பத்திரிக்கையின் ஆசிரியர் ஜெமீலா இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- அதிரடிக்குப் பெயர்போனவர் மறைந்த முன்னாள் முதல்வர் மாண்புமிகு அம்மா. அவரைப் பொறுத்தவரை சாதாரண தொண்டனாக இருந்தாலும் சரி, அமைச்சராக இருந்தாலும் சரி, கட்சிக்கோ, ஆட்சிக்கோ யார் களங்கம் விளைவித்தாலும் அட்ரஸ் இல்லாமல் ஆக்கிவிடுவார். அதைத்தான் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் செய்திருக்கிறார் என்கின்றனர் சிலர். 

அதாவது அம்மா அவர்களின்  பாணியை அப்படியே காப்பியடிப்பதாகச் சொல்கின்றனர். ஆனால், அப்படி காப்பியடிப்பதைக்கூட ஒழுங்காகச் செய்யவில்லை என்கின்றனர், மக்கள். ஆம், போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவிவகித்த ராஜ கண்ணப்பன், அந்தத் துறையிலிருந்து மாற்றப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.

தன்னைச் சந்திக்கவந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை, பிளாஸ்டிக் நாற்காலியில் அமரவைத்துவிட்டு, கம்பீரமான நாற்காலியில் அமர்ந்துகொண்டது, போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கான தீபாவளி பண்டிகை இனிப்புகள் வாங்குவதற்கான டெண்டரில் முறைகேடு, உதவியாளர், காவலரைத் தாக்கிய சம்பவங்கள், போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடந்த லஞ்சஒழிப்புச் சோதனை, அரசு டெண்டர்களில் குடும்பத்தினரின் தலையீடு என அடுத்தடுத்து ராஜ கண்ணப்பன் மீது புகார்கள் வாசிக்கப்பட்டன.

ஆனாலும், ஸ்டாலின் தரப்பு அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்தான், பட்டியலினத்தைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரை ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியது புயலாக மாறியது. அதன்விளைவுதான் அவர்,  வேறு துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். ராஜ கண்ணப்பன் இதுபோன்று சர்ச்சைகளில் சிக்குவது முதல்முறையல்ல. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலேயே அரசியலுக்கு வந்த ராஜ கண்ணப்பன், அம்மா  ஆட்சியில் பல துறைகளில் அமைச்சராக இருந்தவர். அப்போதே ஊழல் வழக்குகள், திருமதி. சசிகலா - நடராஜனுடன் ஏற்பட்ட பிரச்னைகள் எனப் பல குற்றச்சாட்டுகள் அவர்மீது விழுந்தன. ஆனால், ராஜகண்ணப்பன் எந்த தவறுகளையும் சரி செய்யும் எண்ணத்தில்  இல்லை. 

'யார் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின், ராஜ கண்ணப்பனை வேறு துறைக்கு மாற்றியதால் தீர்வு கிடைத்துவிடுமா, இல்லை, மாற்றம் செய்துவிட்டால் அவர்தான் புனிதராகிவிடுவாரா? இதுதான் திராவிட மாடலா? என அடுக்கடுக்காய்க் கேள்விகளைக் கேட்பதுடன், மாண்புமிகு அம்மா அவர்களின்  செயல்களைக் காப்பியடிக்கும் முதல்வர் ஸ்டாலின், ஏன் அதை ஒழுங்காய்ச் செய்யவில்லை எனவும் கேட்கின்றனர். 

இந்நேரம், அம்மா அவர்கள்  இருந்திருந்தால், அந்தத் துறையையே பிடுங்கியிருப்பார். ஆனால், ஸ்டாலினோ இந்த விஷயத்தில் பாயாமல், பதுங்கித்தான் இருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜெமீலா.