24 special

உள்ளே வந்த நீதிமன்றம்...தலையில் கைவைத்த அறநிலையத்துறை... எதிர்பாரா திருப்பம்.. நொந்து போன திமுக

MKSTALIN,COURT
MKSTALIN,COURT

தமிழகத்தில் இந்து கோவில்கள் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற மதம் சர்ச்சுகள் மற்றும்  மசூதிகள் அவரவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழக கோவில்களில் வரும் வருமானம் தமிழக அரசுக்கு முதுகெலும்பாக உள்ளது. ஆனால் இந்து பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்லாமாட்டார் தமிழக முதல்வர். 


திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கோவில்களை மட்டுமே குறி வைத்து ஆட்சி நடக்கிறது. அப்படி என்ன இந்து மக்கள் மேல் கோவம் என்றுதான் புரியவில்லை திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை, கருணாநிதியின் நினைவிடத்தில் , ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தை வைப்பது, திருவண்ணாமலை கோபுரத்தை மறைத்து வணிகவாளகம் கட்டுவது,மாசாணி அம்மான் கோவில் நிதியை எடுத்து ரிசார்ட் கட்டுவது, சென்னிமலை முருகன் கோவில் ஆக்கிரமிப்பு, பழனி முருகன் கோவிலில் பிரச்சனை என நீண்டு கொண்ட போகிறது. 

இந்தநிலையில் '' கோயில் நிலத்தில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்,'' என அறநிலையத்துறை கமிஷனருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை கந்தக்கோட்டம் முத்துக்குமாரசாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் வணிக வளாகம், குடியிருப்புகள் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பழனி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில், '' கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என ஏற்கனவே சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த உத்தரவை மீறி பல கோயில்களில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகிறது''எனக்குற்றம்சாட்டப்பட்டது.

இதனை மறுத்த தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், '' முத்துக்குமார சாமி கோயில் இடத்தில் நடக்கும் கட்டுமான பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்ட பிறகு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 7 கோடி ரூபாய் செலவில் வணிகவளாகம் கட்டப்பட்டு வரும் நிலையில் அதன் மூலம் கோயிலுக்கு மாதம் 7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுபோன்ற பணிகளுக்கு ஏதுவாக அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது'' என்றார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கந்தக்கோட்டம் கோயில் நிலத்தில் நடக்கும் கட்டுமான பணிகளை தொடரலாம். அதே சமயம் அதனை அறநிலையத்துறை சட்டப்படி பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக ரீதியில் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டு தமிழக அரசு மற்றும் கோயில் நிர்வாகம் வரும் நவ.,22ம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டனர்.மேலும் கோயில் நிதியில் இதுபோன்ற வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அதனை செயல்படுத்தத் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.