24 special

முதல்வர் ஸ்டாலினை பார்த்து சாமானியர் ஒருவர் கேட்ட கேள்வியால்....!ஆளும்கட்சி அதிர்ச்சி

Mk stalin
Mk stalin

சாமானியர் ஒருவர் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி குறித்தும் குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி செந்தில் பாலாஜி போன்றோர் குறித்து பகிர்ந்த தகவல் தற்போது பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.


TNNEWS24 எப்போதும் மக்களை சந்தித்து முக்கிய பிரச்சனைகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு வருகிறது  அந்த வகையில் சமீபத்தில் அமைச்சர் பொன்முடி பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் குறித்து கருத்து தெரிவித்த சம்பவம் குறித்து மக்கள் கருத்துக்களை கேட்டது அதில், சாமானியர் ஒருவர் தமிழகத்தில் இந்த கட்சி முந்தய கட்சி எல்லாம் இப்படி தான் இருக்கு அமைச்சர்கள் எல்லாம் சரியில்லை அவர்கள் வேலையை தான் பார்க்கிறார்கள்.

பொன்முடி இப்படி என்றால் செந்தில் பாலாஜி என்ன ஒழுங்கா பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது அவருக்கு தெரியாதா? எங்க வாங்குறாங்க என கேட்டார் இப்போ 10 ரூபாய் பாலாஜி என பெயரே வாங்கிட்டார். முதல்வர் முதல் அவரது மகன் உதயநிதி வரை யார் சரியாக இருக்காங்க, நான் நேரடியா சொல்றேன் முதல்வரே சரியில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் சாமானியர் ஒருவர்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக தொடங்கி இருக்கிறது, தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் தமிழக அமைச்சர்கள் மீதும், தமிழக அமைச்சர்கள் வரம்பு மீறும் போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் மீதும் சாமானிய மக்கள் ஆவேசம் அடைந்து இருப்பது வெளிப்படையாக தெரிய தொடங்கி இருக்கிறது.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இனியும் முதல்வர் ஸ்டாலின் தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலோ இதே போன்று அமைச்சர்கள் பேசி வந்தாலோ மக்கள் மத்தியில் கடுமையான அதிர்ப்தி உண்டாகும் என்பது சாமானியர் பேச்சின் மூலம் தெரியவந்து இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இனியாவது சமூக வலைத்தளங்களில்  அரசிற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வதில் காட்டும் வேகத்தை மக்கள் பணி செய்வதில் காட்டுமா? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.