
ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது வெறும் எல்லைக்கோடுகளைப் பாதுகாப்பதுடன் முடிந்துவிடுவதில்லை. நாட்டின் விமான நிலையங்கள், கடல் துறைமுகங்கள், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் முக்கியப் பொதுக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதும் அதே அளவுக்கு முக்கியமானது என்பதை இந்தியா இன்று உலகிற்கு மிகவும் துணிச்சலாக உணர்த்தியுள்ளது. வல்லரசு நாடுகளுக்கே சவால் விடும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை ஒட்டுமொத்த சர்வதேச அரங்கையும் உற்றுநோக்க வைத்துள்ளது.
துருக்கியைச் சேர்ந்த 'செலி ஏவியேஷன்' (Çelebi Aviation) என்ற நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொச்சி, கண்ணூர் உள்ளிட்ட மிக முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் தரை சேவைகள், சரக்கு கையாளுதல் மற்றும் ஒட்டுமொத்த விமான சேவைகள் தொடர்பான அதிமுக்கியப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்தியாவின் வான்வழிப் போக்குவரத்தின் இதயப்பகுதியாக விளங்கும் இந்த இடங்களில் அந்நிய நாட்டு நிறுவனம் இவ்வளவு காலம் கோலோச்சிக் கொண்டிருந்த வேளையில்தான், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் எழுந்தது.
சமீபத்தில் இந்தியா மேற்கொண்ட "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கைக்குப் பிறகு, துருக்கி நாடு தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததும், இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சார்ந்த ரகசியங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் சூழல் மாறியதும் கண்டறியப்பட்டது. இந்தியாவின் அசைக்க முடியாத இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வருவதை மோப்பம் பிடித்த இந்திய அரசு, சற்றும் தயங்காமல் வரலாற்றிலேயே மிக முக்கியமான, துணிச்சலான ஒரு முடிவை எடுத்தது. தேசிய பாதுகாப்பை மட்டுமே முதன்மைக் காரணமாகக் காட்டி, செலி ஏவியேஷன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த ஒட்டுமொத்த பாதுகாப்பு அனுமதியையும் அதிரடியாக ரத்து செய்தது. இதன் விளைவாக, இந்தியாவின் மிக முக்கிய விமான நிலையங்களில் அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் ஒரே இரவில் முடக்கப்பட்டன.
இந்த அதிரடி முடிவு உலக நாடுகள் அனைத்தையும் அதிரச் செய்துள்ளது. ஏனென்றால், இது ஏதோ ஒரு தனியார் நிறுவனத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட சாதாரண நடவடிக்கை அல்ல; மாறாக, "இந்தியாவின் தேசிய பாதுகாப்பை விடவும், நாட்டின் இறையாண்மையை விடவும் இங்கு எந்தவொரு பன்னாட்டு நிறுவனமும், எந்தவொரு வெளிநாட்டு முதலீடும், பல்லாயிரம் கோடிகள் ஈட்டித் தரும் எந்தவொரு லாபமும் ஒருபோதும் பெரிதல்ல" என்று உலக அரங்கிற்கு இந்தியா உரக்கச் சொல்லியிருக்கும் அதிரடி எச்சரிக்கை இது.
இந்த அதிரடி நடவடிக்கையைத் தாங்க முடியாமல், அந்த நிறுவனம் உடனடியாக நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு ஆதரவாக உத்தரவு பெற முயன்றது. ஆனால், நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன் என்பது முழுமையாக அரசின் முதன்மையான பொறுப்பு என்றும், உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்தகைய தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிமன்றமும் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகி, இந்தியாவின் இந்த மாஸ் நடவடிக்கைக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.
இதிலிருந்து உலக நாடுகள் அனைத்தும் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு கசப்பான உண்மை இருக்கிறது. இது பழைய பலவீனமான இந்தியா அல்ல; தன் நாட்டின் பாதுகாப்பு குறித்து முடிவெடுக்க யாரிடமும் அனுமதி கேட்கும் தேசமும் அல்ல; நாட்டின் நலனுக்காகவும், மக்களின் பாதுகாப்பிற்காகவும் எவ்வளவு பெரிய உலக நாடுகளை எதிர்த்தும், எவ்வளவு பெரிய பொருளாதார இழப்பைச் சந்திக்க நேர்ந்தாலும், மிகக் கடுமையான மற்றும் அதிரடியான முடிவுகளைத் துணிச்சலோடு எடுக்கத் தெரிந்த "புதிய மாஸ் இந்தியா".
