தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போது எந்த நிகழ்வில் கலந்து கொண்டாலும் அவரது செயல்கள் சர்ச்சையாக முடிகின்றன, வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை வந்தபோது அவரது உடலுக்கு மரியாதை செலுத்துவதில் ஏற்பட்ட மோதல் கடும் சர்ச்சையாக முடிந்தது.
அமைச்சர் மீது செருப்பு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறின, இந்த சர்ச்சை ஒருபுறம் என்றால் தற்போது உயர் நீதிமன்றத்திடம் திமுக வாங்கிய கொட்டு மூலம் விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள் உண்டாகலாம் என்றெல்லாம் கூறப்படுகிறது உச்ச நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகள் கொடுக்கும் இலவச வாக்குறுதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இது குறித்து ஆங்கில ஊடகத்தில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இலவச திட்டங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார், அவர் கூறிய கருத்து தற்போது அவரது கட்சிக்கே எதிராக விமர்சனத்தை உண்டாக்கி இருக்கிறது.
விவாதத்தில் பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இலவசம் தேவையா இல்லையா என்ற விவாதம் இதற்கு முன்பு 15வது நிதிக் குழு தனது நெறிமுறைகளை வெளியிட்டப் போதே நடைபெற்றது. அப்போது ஒரு திட்டத்தை நல்ல இலவச திட்டம், தீய இலவச திட்டம் என எப்படி வரையறுப்பீர்கள் என கேள்வி எழுந்ததாக தெரிவித்தார்.
நிதி எப்படி கையாளப்படுகிறது என்பதை கண்காணிப்பவராக உச்ச நீதிமன்றம் எந்த அடிப்படையில் செயல்படுகிறது எனவும் கடுமையாக நீதிமன்றத்தை சாடி இருந்தார் பழனிவேல் தியாகராஜன்.
அரசியலைப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்றம் மட்டுமல்ல எந்த நீதிமன்றமும் எப்படி மக்களின் பணம் செலவிடப்படுகிறது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட சட்டமன்றங்களுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என பேசி இருந்தார் தமிழகத்தை சேர்ந்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இது நீதிமன்றம் மீது வைத்த கடுமையான விவாதமாக பார்க்கப்பட்டது.
இந்த சூழலில் தான் பழனிவேல் தியாகராஜன் கருத்திற்கு நீதிமன்றத்தில் வைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திமுக வழக்கறிஞரை வெளுத்து எடுத்து இருக்கிறார், இலவச திட்டங்களை வாக்குறுதியாக அளிப்பதற்கு எதிரான வழக்கில், திமுக மட்டும்தான் அறிவார்ந்த கட்சி என நினைத்து கொள்ள வேண்டாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விமர்சித்திருக்கிறார்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி இலவச திட்டங்கள் குறித்த. விவகாரத்தில் பிரச்னை இருக்கிறது, இதை யாரும்மறுக்கமுடியாது. இதுகுறித்து நிச்சயமாக விவாதம்
என்பது தேவை. இந்த விவகாரம் அரசின் கொள்கைசார்ந்த விவகாரம்; அதனால் நீதிமன்றம் தலையிடமுடியாது என கூற முடியுமா? ஏதாவது சட்டம்
இயற்றப்படும்போது அதனை ஆய்வு செய்யஉச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையா?உதாரணமாக மாநிலங்கள் இலவசங்களை வழங்க
முடியாது என மத்திய அரசு ஒருவேளை சட்டம்இயற்றுவதாக வைத்துக் கொள்வோம், அல்லது மாநில அரசுகள் ஒரு சட்டத்தை உருவாக்கிறது என வைத்துக்கொள்வோம்.
அத்தகைய சட்டம் சரியானதா இல்லையா என்பதை நீதித்துறை ஆய்வுக்கு உரியது அல்ல என உங்களால் சொல்ல முடியுமா? எனவே நாட்டின் நலனுக்காக தான் இந்த
பிரச்னையை கேட்கிறோம் என அதிரடியாக குறிப்பிட்டார் தலைமை நீதிபதி திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நீதிமன்றங்களுக்கு இலவசம் குறித்து விவாதிக்க உரிமை இல்லை என கூறிய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மொத்தத்தில் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாக இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறாராம், விரைவில் அமைச்சரவை மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது முக்கிய அமைச்சர்கள் பலரது இலாகா மாற்றப்படலாம் எனவும், குறிப்பாக நிதி துறை, பள்ளிக்கல்வி துறை, உயர்கல்வி துறை போன்ற இலாகா தற்போதைய அமைச்சர்களிடம் இருந்து மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் ஒரு வருட திமுக ஆட்சியில் அமைச்சர்கள் சிலர் ஊடகங்களில் கொடுக்கும் பேட்டி திமுக குறித்து தங்களுக்கு தெரியும் என தலைமை நீதிபதியே விமர்சனம் செய்யும் அளவிற்கு சட்ட துறை சர்ச்சையில் சிக்கியுள்ளது திமுக.